சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின் மீது மீண்டும் பாய்ச்சல்... ராணிப்பேட்டையில் சவால் விட்ட முதல்வர் எடப்பாடியார்!

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலினை நேரடி விவாதத்திற்கு வர அழைத்தால் ஏன் வர மறுக்கிறார் என அரக்கோணம் கையனூரில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். விவசாய வேளாண் பயிர் கடன்கள் ரத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது என்றும் கூறினார்.

Recommended Video

    ஸ்டாலின் மீது மீண்டும் பாய்ச்சல்... ராணிப்பேட்டையில் சவால் விட்ட முதல்வர் எடப்பாடியார் - வீடியோ

    ராணிப்பேட்டைமாவட்டம் அரக்கோணம் கையனூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் அவர் பேசுகையில் அதிமுக அரசு மக்களுக்கு கொடுத்து தான் பழக்கம் அதனால் தற்போது மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.,2500 வழங்கினோம்.

    ஆனால் திமுகவுக்கு எப்போதும் மக்களிடம் எடுத்துதான் பழக்கம். அதிமுக ஆட்சியில் ஏழை குடும்பங்கள் கல்வி பெற ஏற்பாடு செய்தோம் திமுக ஆட்சியில் ஏழைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

    மருத்துவ படிப்பு

    மருத்துவ படிப்பு

    நாங்கள் பல பள்ளிகளை தரம் உயர்த்தினோம். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். ஆனால் இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என ஸ்டாலின் பொய் பரப்புரை செய்கிறார். சம்பந்தமில்லாமல் பேசுகிறார். அவர் சட்டமன்றத்திற்கும் வருவது கிடையாது நாட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது. இந்த நிலையில் செய்திதாள்களில் எதற்கு பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார் என்று கேட்கிறார்.

    நாகரீகம் இல்லாமல் பேச்சு

    நாகரீகம் இல்லாமல் பேச்சு

    எடப்பாடி பழனிசாமி என்ன கிழித்தார் என்று நாகரீகமில்லாமல் பேசுகிறார் ஸ்டாலின். ஆனால் அவர் தெரிந்து கொள்வதற்காகவும் மக்களும் எதிர்க்கட்சிகளும் தெரிந்து கொள்வதற்காக தான் செய்தி தாள்களில் விளம்பரம் கொடுக்கிறோம். என்ன கிழித்தாய் என்கிறாய் என்ன கிழித்தோம் என்பதை தான் சொல்கிறோம்.

    2 லட்சம் வீடுகள்

    2 லட்சம் வீடுகள்

    மக்களுக்கு நாங்கள் என்ன செய்தோம் என்பதை கூற நேரடி விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் வருவதில்லை. நகர்புற மக்கள் கிராமப்புற மக்களுக்கு புதியதாக ரூ.1804 கோடி 2 லட்சம் வீடுகளை கட்டி வழங்கியுள்ளோம். கொரோனா காலத்திலும் எல்லா மாநிலத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம்.

    முதல்வர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமி

    வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கினோம் ஸ்டாலின் பெட்டி வைத்து மனுக்களை பெறுகிறார். ஆட்சிக்கு வந்தவுடன் தீர்ப்போம் என்கிறார். அவர் ஆட்சிக்கு வரபோவதுமில்லை மக்களின் குறைகளை தீர்க்க போவதுமில்லை. ஆனால் எங்கள் அரசு மாநிலம் முழுவதும் 30 லட்சம் மனுக்களை பெற்று ஐந்து லட்சம் மனுக்களை தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தோம். ஒருவார காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனை தள்ளுபடி செய்யவுள்ளோம். எனவே எங்களுக்கு ஆதரவு தாருங்கள்" இவ்வாறு பேசினார்.

    English summary
    Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy questioned mk stalin during the election campaign in Arakkonam. CM asks why Stalin refuses to come if he is invited to come for a direct discussion. He also said that the government has issued 'GO' to cancel agricultural and crop loans.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X