சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூணாறு மீட்பு பணிகளுக்கு உதவ நாங்கள் தயார்.. பினராயியிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

சென்னை: மூணாறு மீட்பு பணிகளுக்கு உதவுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று மூணாறு. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்த இடத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழர்கள், நல்லதண்ணி எஸ்டேட், கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட், கொழுக்குமலை எஸ்டேட் என ஆங்காங்கே உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்கிறார்கள்.

Edappadi Palanisamy says that TN will help Kerala in rescue operations in Munnar landslide

இவர் தேயிலை தோட்ட நிர்வாகத்தால் கட்டிக் கொடுக்கப்படும் வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கேரளாவில் கனமழை கொட்டியதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ராஜமலை பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் 70-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணிற்குள் புதையுண்டனர்.

Recommended Video

    Munnar Landslide: சிக்கிய தமிழ் தேயிலை ஊழியர்கள்

    தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் விரைந்து சென்று மீட்பு பணிகளை நடத்தி வருகிறது. இதில் இதுவரை மண்ணில் புதையுண்ட 35 பேரின் உடல்கள் கிடைத்துள்ளன. மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுகிறது. எனினும் மழை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    மூணாறு நிலச்சரிவில் பலியான தமிழர்கள்- தமிழக அரசு ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் மூணாறு நிலச்சரிவில் பலியான தமிழர்கள்- தமிழக அரசு ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

    இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராய் விஜயனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசினார். அப்போது கேரளா மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கேரளாவின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ தமிழகம் தயார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.

    English summary
    Tamilnadu and Kerala CMs spoke each other and discuss about rescue operations in Munnar landslide incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X