சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கல்தா- ரஜினி கட்சிக்கு தாவுகிறார்?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவியும் ஓரிரு நாட்களில் பறிக்கப்பட உள்ளதாம். ரஜினிகாந்த் தொடங்கும் கட்சிக்கு தாவுவதற்கு ரெடி என சிக்னல் கொடுத்த நிலையிலேயே அவர் மீது அதிமுகவின் இரட்டை தலைமை அடுத்தடுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதிமுகவில் பாஜகவின் முகமாக அதிரடி காட்டியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தமிழக பாஜக தலைவர்களே பேச தயங்குகிற மத ரீதியான விமர்சனங்களை அமைச்சர் என்கிற கோதாவில் பகிரங்கமாக பேசிவந்தார் ராஜேந்திர பாலாஜி.

 "பரமாத்வே காப்பாத்து".. தேவையில்லாமல் டிவீட் போட்ட ராஜேந்திர பாலாஜி.. மா.செ. பதவி அதிரடி பறிப்பு

எச்சரித்த எடப்பாடி

எச்சரித்த எடப்பாடி

இதனால் அதிமுக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து சொல்ல வேண்டிய முறையில் எச்சரித்தும் பார்த்திருக்கிறார். நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் கூறியிருக்கிறார். ஆனாலும் நான் அப்படித்தான் இருப்பேன் என்கிற ரேஞ்சிலேயே பேசிவந்தார் ராஜேந்திர பாலாஜி.

ரஜினியுடன் ஆலோசனை

ரஜினியுடன் ஆலோசனை

மேலும் பாஜகவின் பினாமியைப் போல நடிகர் ரஜினிகாந்த் செயல்பட்டு வருகிறார். தந்தை பெரியார் குறித்து அவதூறாக ரஜினிகாந்த் பேசிய நிலையில் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அப்போதே அவருக்கான ஆப்பு ரெடியாகிவிட்டது என்கின்றன அதிமுக வட்டாரங்கள். ஆனாலும் பொறுமை காத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளரை கொடூரமாக தாக்கியது, கொரோனாவில் குறுக்குசால் ஓட்டும் வகையில் கருத்து தெரிவித்தது ஆகியவற்றால் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்.

விரைவில் கல்தா?

விரைவில் கல்தா?

ஏற்கனவே துணை முதல்வர் ஓபிஎஸ்_க்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடும் அதிருப்திதானாம். இதனால் இப்போது கட்சிப் பதவியில் இருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் அவரது அமைச்சரவை பதவிக்கும் கல்தா கொடுக்கப்படும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

ரஜினி கட்சிக்கு தாவுகிறார்?

ரஜினி கட்சிக்கு தாவுகிறார்?

அதேநேரத்தில் ராஜேந்திரபாலாஜி தரப்போ, அதிமுகவால் இனி ஆட்சி அமைக்கவே முடியாது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதனால் எதிர்காலம் கருதியே அண்ணன் சில முடிவுகளை எடுத்திருக்கிறார். பாஜகவில் நேரடியாக இணைந்தாலும் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்க முடியும். ஆட்சி அதிகாரத்துக்கு அந்த கட்சியும் வராது. அதனால் ரஜினிகாந்த் கட்சிக்கு அண்ணன் ராஜேந்திர பாலாஜி செல்லக் கூடும். இதேபோல் பலரையும் ராஜேந்திர பாலாஜி, ரஜினி கட்சிக்கு இழுத்துச் சென்றுவிடுவாரோ என்பதாலேயே நடவடிக்கை எடுத்துள்ளனர் என வியாக்யானம் கொடுக்கின்றனர்.

English summary
Sources said that TamilNadu Chief Minsiter Edappadi Palanisamy will sack Minister Rajendra Balaji from his cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X