சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜதந்திரி.. அடுத்தடுத்த 2 அறிவிப்பால் குட் மார்க் வாங்கிய முதல்வர்.. அதிர்ச்சியில் திமுக தரப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்தடுத்த இரண்டு அறிவிப்புகளால் அவருக்கு பெரிய அளவில் நற்பெயர் கிடைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்தடுத்த இரண்டு அறிவிப்புகளால் அவருக்கு பெரிய அளவில் நற்பெயர் கிடைத்து இருக்கிறது. திமுக உள்ளிட்ட கட்சிகளை அவரின் அறிவிப்பு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இது பெரிய அளவில் எதிர்பலைகளை சம்பாதித்தது.

இதற்கு எதிராக திமுக கட்சி போராட்டம் நடத்தியது. மாணவர்களின் கல்வி பாதிக்கும். இதையடுத்து இந்த தேர்வை தமிழக அரசு கைவிட்டது. கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியானது. தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்திற்கு தடை கோரி வழக்கு.. இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்திற்கு தடை கோரி வழக்கு.. இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!

வேறு என்ன

வேறு என்ன

இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். இதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார் . அவரின் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.

 எப்படி இருந்தார்

எப்படி இருந்தார்

ஒரு காலத்தில் 8 வழி சாலை திட்டத்திற்காக நேரடியாக பல லட்சம் ஏக்கர் நிலங்களை அழிக்க தயாராக இருந்தவர்தான் முதல்வர் பழனிசாமி. சேலம் மக்கள் இதனால் கொதித்து போனார்கள். ஆனால் சேலம் மக்கள் இதை கடுமையாக எதிர்த்தும் கூட, முதல்வர் பழனிசாமி இந்த சாலையை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். கடைசியில் மக்கள் எதிர்ப்பால் இந்த சாலை திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறார்.

ஆனால் தற்போது

ஆனால் தற்போது

ஆனால் தற்போது இவர் திடீரென்று விவசாயத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . இதனால் சேலம் சாலை விஷயத்தில் முதல்வருக்கு ஏற்பட்ட கறை பெரிய அளவில் சரி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு முதல்வர் ஆதரவானவர். இதுவரை எந்த ஒரு முதல்வரும் அறிவிக்காததை இவர் அறிவித்து இருக்கிறார். இதனால் டெல்டாவில் இப்போதே மக்கள் அவரை கொண்டாட தொடங்கிவிட்டனர்.

திமுக

திமுக

பொதுவாக டெல்டா மாவட்டங்கள் திமுகவின் கோட்டையாக இருந்தது. தற்போது அதை அதிமுக தனது பக்கம் இழுக்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாகத்தான் முதல்வரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் பழனிசாமியின் இந்த அறிவிப்பு திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டெல்டாவில் இதன்மூலம் திமுகவின் ஆதரவு சரியலாம் , அதிமுகவின் ஆதரவு பெரிய அளவில் உயரலாம் என்று கூறுகிறார்கள் .

தொண்டர்கள் கருத்து

தொண்டர்கள் கருத்து

திமுக தொண்டர்களும் இது தொடர்பாக திமுக தலைமைக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிமுக டெல்டாவில் நல்ல பெயர் எடுத்து வருகிறது. டெல்டா மக்கள் அதிமுகவை கொண்டாட தொடங்கிவிட்டனர். இப்போதே அதிரடியாக செயல்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள் . திமுக தலைமையும் இது தொடர்பாக விரைவில் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளும் என்கிறார்கள்.

English summary
TN CM Edappadi Palanisamy two announcements get good mark: DMK in shock.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X