சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாற்று சிறப்பு வாய்ந்தது மக்களே.. வரவேற்க தயாராகுங்கள்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    2000 வருட பந்தம்.. தமிழர் பெருமை.. சீன அதிபர் வருகைக்கு மகாபலிபுரத்தை தேர்வு செய்தது ஏன்?

    சென்னை: மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை, சென்னை வருகிறார். பிரதமர் மோடியும் அன்றே, சென்னை வருகிறார்.

    Edappadi Palanisamy wants grand welcome for Chinese President Xi Jinping

    எனவே, மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகை தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். மாமல்லபுரம் வரும் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு தர வேண்டும். பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    ஜி ஜின்பிங் பயணிக்க ஏற்பாடு.. சீனாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தது அதி நவீன Hongqi கார்கள்ஜி ஜின்பிங் பயணிக்க ஏற்பாடு.. சீனாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தது அதி நவீன Hongqi கார்கள்

    பல்லவ நாட்டின் துறைமுகமாக இருந்த மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பொருத்தமாக இருக்கும். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சீனா, தமிழகம் இடையே வணிக, கலாச்சார தொடர்பு இருந்து வந்தது. இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழகத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, சீன அதிபரை வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy appealed to the people to give grand welcome to Chinese President Xi Jinping who will visit Mamallapuram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X