வைத்திலிங்கம் ஓபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லை.. பொதுச்செயலாளர் தீர்மானம் வருவது உறுதி- பற்ற வைத்த விச்சு!
சென்னை : அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும், ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தை எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பல்வேறு தலைமைக் கழக நிர்வாகிகள் இன்று ஆய்வு செய்தனர்.
பொதுக்குழு நடக்கும் இடத்தை ஆய்வு செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
ஓபிஎஸ்ஸுக்கு லெட்டர்.. நெருங்கும் கிளைமாக்ஸ்.. காயின் நம்ம பக்கம் தான் - பரபர பிளானில் எடப்பாடி!

பொதுக்குழு நிச்சயம் நடக்கும்
அப்போது பேசிய நத்தம் விஸ்வநாதன், "அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூலை 11ஆம் தேதி மிகச்சிறப்பாக எழுச்சியோடு நடைபெறும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதிமுக பொதுக்குழு கூடுவதில் எந்தவித சட்டச் சிக்கலும் இல்லை. சென்ற முறை பொதுக்குழு நிராகரித்த 23 தீர்மானங்களில் ஒருசில தீர்மானங்களை தவிர்த்து மற்ற தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும். குறிப்பாக, அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும்.

பொதுச் செயலாளர் தீர்மானம்
கழகத்தில் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பொதுச் செயலாளர் பதவி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அவர் பெற்றிருந்ததைப் போல அதிகாரங்களோடு பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்கான தீர்மானம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைத்திலிங்கம் தவறான தகவல்
பொதுக்குழு சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தவறான செய்திகளை பரப்பி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை சுற்றி இருப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவே பொதுக்குழு பற்றி தவறான தகவல்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் வைத்திலிங்கம். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அத்தனையும் செயல்பாட்டிற்கும் வரும்.

ஒத்த கருத்து இல்லை
ஓ.பன்னீர்செல்வம் இரண்டு நாட்களுக்கு முன்பு நான்தான் இன்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறேன் என்று சொன்னார். ஆனால், அவருடன் இருக்கும் வைத்திலிங்கம் ஓபிஎஸ் கருத்துக்கு மாறாக இப்போது இரட்டைத் தலைமையில் சர்ச்சை நிலவுகிறது என்று சொல்கிறார். அங்கே இருக்கிற இருவருக்குமே ஒத்த கருத்து இல்லை என்பது தெளிவாகிறது" எனத் தெரிவித்துள்ளார்.