ஒன்னு கூடிட்டாங்களே! ஓபிஎஸ்க்கு கிடைத்த க்ரீன் சிக்னல்! படபடப்பில் எடப்பாடி & கோ! கூடிய பஞ்சாயத்து!
சென்னை : ஜுலை 11ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு குறைந்த கால அவகாசமே இருக்கும் நிலையில் இவ்வளவு நாள் அமைதி காத்து வந்த சசிகலா ஓபிஎஸ்க்கு ஆதரவாகப் பேசியிருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் அவரது இல்லத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே அண்மைக்காலமாக போட்டியே நிலவி வருகிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என கூறிக் கொண்டு .சசிகலா அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சசிகலா ஆதரவு?
சில தினங்களுக்கு முன்பு திருத்தணிக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்குவதாக கூறப்படும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சசிகலா, அதிமுகவில் எதேச்சதிகாரமாக யாரும் யாரையும் நீக்க முடியாது என அதிரடியாகக். கூறினார்.

ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தபோதும் சரி பொது குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்ட போதும் சரி, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அவருக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது நடைபெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் பல்வேறு நேரங்களில் செய்தியாளிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே பேசி வந்திருக்கிறார். பணபலம் மூலம் கட்சியை கைப்பற்ற அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார் ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஓபிஎஸ் உற்சாகம்
இந்த நிலையில் தான் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒருவகையில் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் சசிகலா. இதன் காரணமாக அதிமுகவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களிலும் அமமுகவினர் மற்றும் அதிமுகவினர் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்காக எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரிரு நாட்களில் இன்னும் போஸ்டர் யுத்தம் தீவிரம் அடையலாம் எனவும், விரைவில் இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி ஆலோசனை
இலையில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான சட்ட வியூகங்கள் குறித்து நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, இன்றும் இரண்டாவது நாளாக அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர் .அதிமுக பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் சசிகலா ஓபிஎஸ் குறித்த பேச்சு பொதுக்குழுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.