சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி! அதிமுக அரசு செய்த மரியாதைகளை பட்டியலிட்டு பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி விழா மற்றும் 58 வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அஞ்சலி செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்று அப்போது அவர் பெருமிதம் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னதாக மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருந்தார்.

Edappadi Palaniswami paid tribute at Muthuramalinga Thevar Memorial

பசும்பொன்னில் நிருபர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: 1908ஆம் ஆண்டு பசும்பொன் கிராமத்தில் தேவர் பெருமகனார் பிறந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து இளைஞர்களை திரட்டி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

Edappadi Palaniswami paid tribute at Muthuramalinga Thevar Memorial

1920 ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதிகளில் நடைமுறையில் இருந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக தேவர் மேற்கொண்ட போராட்டம் முக்கியமான போராட்டமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edappadi Palaniswami paid tribute at Muthuramalinga Thevar Memorial

தேவர் திருமகனார் பிறந்ததும், மறைந்ததும் அக்டோபர் 30ஆம் தேதி. தனது வாழ்நாளில் 4 ஆயிரம் நாட்களை சிறையில் கழித்துள்ளார். தேவர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று எம்ஜிஆர் அறிவித்தார். 1979ஆம் ஆண்டு முதல் இதுவரை பசும்பொன் கிராமத்தில் அரசு விழாவாக தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதற்கு அதுதான் காரணம்.

Edappadi Palaniswami paid tribute at Muthuramalinga Thevar Memorial

வடை போச்சே... ரஜினி முடிவால் பகீர் ஏமாற்றத்தில் பாஜக- திமுக அதிமுக ஹேப்பி அண்ணாச்சி! வடை போச்சே... ரஜினி முடிவால் பகீர் ஏமாற்றத்தில் பாஜக- திமுக அதிமுக ஹேப்பி அண்ணாச்சி!

சென்னையில் வெங்கல சிலை, தேவருக்கு தங்க கவசம் என அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Chief Minister Edappadi Palaniswami today paid tributes at the Muthuramalinga Thevar Memorial. He was then proud that the AIADMK government had implemented various projects for the people of Ramanathapuram district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X