ஜெயலலிதா செய்யாததை செய்த ஓபிஎஸ்! தூக்கியே ஆகனும்! கங்கணம் கட்டி களமிறங்கிய இபிஎஸ்! ஜுலை 11 ட்விஸ்ட்!
சென்னை : ஜுலை 11ஆம் தேதி நடக்கவுள்ள அடுத்த அதிமுக பொதுக்குழுவில் முக்கியமான திட்டம் ஒன்றை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போதே தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்குள் எழுந்துள்ள போட்டி கடந்த பொதுக்குழுவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவால் அது நிறைவேறவில்லை..
இதனால் ஓபிஎஸ் தரப்பு சற்று அதிருப்தியில் இருந்தாலும் எப்படியாவது ஒற்றைத் தலைமையை கைப்பற்றி விட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது.
நீங்க நினைக்கிறத செய்யுறதுக்கு ஒண்ணும் நீதித்துறை இல்ல.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நேரடி அட்டாக்!?

அதிமுக ஒற்றைத் தலைமை
அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என மேடையிலேயே முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் ஆவேசமாக பேசி விலையில் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் நடைபெறும் எனவும் அப்போது ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஆவேசமாக பேசினார். இதனையடுத்து மீண்டும் சட்டப் போராட்டத்தினை துவக்கி உள்ள நிலையில் முன்னதாக கடந்த 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு
பொறுப்பேற்ற உடனேயே பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார். இதனிடையே அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடுத்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு
அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்கனவே தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. இதனை எதிர்பார்த்த ஓபிஎஸ் தரப்பு தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தற்போது ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பொதுக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இபிஎஸ் திட்டம்
இந்நிலையில் பொதுக்குழு நடக்காது என ஒபிஎஸ் ஆதரவாளரான தரப்பு வைத்தியலிங்கம் கூறியுள்ளார். ஆனால் எப்படி ஆனாலும் பொதுக்குழுவை நடத்தியே தீருவோம் என எடப்பாடி தரப்பு தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டாம், அந்த ஒற்றை தலைமை பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றி விடக்கூடாது என்பதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எடுத்து வரும் நிலையில் ஜூலை 11ஆம் தேதி அன்று நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தீவிர ஆலோசனை
எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி சிறு இடைவேளைக்கு பிறகு நேற்று முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டரை சந்தித்து பேசி உள்ளார். அதில் ஓபிஎஸ்ஐ கட்சியிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளர் பாபுமுருகவேல் உள்ளிட்ட சட்ட நிபுணர்களிடம் சில விவரங்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது அதில் திமுக எதிர்ப்பு கொள்கையில் சற்றும் பின்வாங்காத ஜெயலலிதா வளர்த்த கட்சியில் இருக்கும் ஓபிஎஸ் நீண்ட நாட்களாக அதிலிருந்து விலகி வருவதாக கூறப்படுகிறது.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமல்லாது உதயநிதி, துரைமுருகன் உள்ளிட்டோரை பாராட்டி பேசி வருவதோடு, முன்னாள் முதல்வரான கருணாநிதியை பாராட்டியது, கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே இதனை எல்லாம் காரணம் காட்டுவதோடு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, ஓ.ராஜா ஆகியோரை சந்தித்து பேசிய புகார்களோடு சேர்த்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் எடப்பாடி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.