சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் தமிழ் வழிப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமியுங்கள்.. எடியூரப்பாவுக்கு எடப்பாடியார் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: கர்நாடக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

Edappadi Palaniswami writes a letter to Karnataka CM Yeddyurappa

கர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. புதிதாகத் தொடங்கும் தனியார் தமிழ்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும் அங்குள்ள தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சுரங்கம், காபித் தோட்டம், கட்டுமானத் தொழில், வேளாண்துறை ஆகியவற்றின் மூலம் கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தமிழர்கள் பெரும்பங்காற்றியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

12 வயது சிறுமியை சீரழித்து.. கரண்ட்டை செலுத்தி கொன்று.. ஈரக்குலையே நடுங்குது.. பொங்கிய சீமான்12 வயது சிறுமியை சீரழித்து.. கரண்ட்டை செலுத்தி கொன்று.. ஈரக்குலையே நடுங்குது.. பொங்கிய சீமான்

கர்நாடகாவில் தமிழ் வழியாக கல்வி கற்கும் தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும். கர்நாடகாவில் சமீபத்தில் மூடப்பட்ட தமிழ் வழிப்பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தமிழ் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami has written a letter to Karnataka Chief Minister Yeddyurappa asking him to reopen closed Tamil schools in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X