சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புரியாமல் விளையாடுகிறார்! எடப்பாடி பின் இருக்கும் அந்த "புள்ளி".. மிதுன் பழனிசாமிக்கு பறந்த வார்னிங்

ஈரோடு இடைத்தேர்தலில் வரும் முடிவால் அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. இதேபோல் வேறு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்திருந்தால் நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவ

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை வைத்து எதுவும் சொல்ல முடியாது, இதில் எடுக்கும் வாக்குகளை வைத்து யார் பெரிய ஆள் என்று சொல்ல முடியாது என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக மிக தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்த தேர்தலுக்காக தீவிரமான பணிகளை அவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

இதையடுத்தே 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் இங்கே வேட்பாளரை களமிறக்குவது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசனை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேட்டி அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாள் குறித்த காங்கிரஸ்.. பிப்.3ல் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்?ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாள் குறித்த காங்கிரஸ்.. பிப்.3ல் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்?

ஈரோடு

ஈரோடு

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஈரோட்டில் எடப்பாடி, ஒபிஎஸ் இருவரும் களத்தில் இருக்கிறார்கள். இதற்கு முன் நடந்த தேர்தல்களை பாருங்கள். இந்த இடைத்தேர்தலை வைத்து எதுவும் சொல்ல முடியாது. இதில் எடுக்கும் வாக்குகளை வைத்து யார் பெரிய ஆள் என்று சொல்ல முடியாது. டிடிவி தினகரன் ஆர். கே நகரில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். ஆனால் சட்டசபை தேர்தலில் ஐந்தரை சதவிகிதம்தான் வாக்குகள் பெற்றார். அதனால் இடைத்தேர்தலை வைத்து எதுவும் சொல்ல முடியாது. என் வழி தனி வழி என்று எடப்பாடி சொல்கிறார். உசிலம்பட்டி பக்கமோ, முதுகளத்தூர் பக்கமோ தேர்தல் வந்தால் எடப்பாடி இப்படி சொல்லுவாரா?

அதிமுகவின் எதிர்காலம்

அதிமுகவின் எதிர்காலம்

இந்த இடைத்ததேர்தலில் வரும் முடிவால் அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. இதே வேறு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்திருந்தால் நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் இந்த களத்தில் இல்லை. ஆர். கே நகரில் ஹீரோவாக வந்தவர். இப்போது டிடிவி தினகரன் எடப்பாடி எதிர்ப்பு என்ற களத்தில் இருக்கிறார். ஈரோடு கிழக்கில் தேர்தல் நடப்பதால் எடப்பாடிக்கு சாதகமான சூழ்நிலை இருக்கிறது. ஈரோடு கிழக்கு என்பதால்தான் எடப்பாடிக்கு சாதகமான நிலை இருக்கும்.

ஜெயிக்க வாய்ப்பு இல்லை.

ஜெயிக்க வாய்ப்பு இல்லை.

தற்போது ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் - திமுக கூட்டணி பெரிதான கூட்டணியாக உள்ளது. இங்கே எடப்பாடி அணி ஜெயிக்க வாய்ப்பு இல்லை. இந்த தேர்தலில் தான்தான் திமுக எதிர்ப்பு என்று காட்ட அவர் நிற்கிறார். மற்றபடி அவர் 2024 தேர்தல் மீதும் கவனம் செலுத்தவில்லை. 2026 தேர்தலை பார்த்துக்கொள்வோம். அதற்குள் அண்ணாமலை, மோடியை கழற்றிவிட்டுவிடுவோம். ஓபிஎஸ்ஸை கழற்றிவிட்டுவிடுவோம். நாம் எமர்ஜ் ஆகிவிடுவோம் என்று எடப்பாடி நினைக்கிறார். இதுதான் அவர் திட்டமிடுகிறார்.

மிதுன் பழனிசாமி

மிதுன் பழனிசாமி

அவரின் திட்டத்திற்கு பின் இருப்பவர்கள் சுனில், எடப்பாடி மகன் மிதுன் பழனிசாமி. இவர்கள்தான் எடப்பாடிக்கு இந்த திட்டத்தை வகுத்து கொடுத்தனர். மிதுன் பழனிசாமி புரியாமல் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் வார்ன் செய்கிறேன். அவர்கள் இந்த பாதையை பின்பற்றினால் 15 சதவிகித வாக்குகள்தான் பெறுவார்கள். இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தான் தனியாக நிற்பேன் என்று கூறினால் 15 சதவிகித வாக்குகளை அவர் பெற மாட்டார்.

விளையாடுகிறார்

விளையாடுகிறார்

ஆனால் எடப்பாடி இதை புரிந்துகொள்ளாமலே மோடியை கழற்றிவிட பார்க்கிறார். மோடியை ஏமாற்ற பார்க்கிறார். மோடியை கழற்றிவிட்டுவிட்டு, ஓபிஎஸ் இல்லாமல் எடப்பாடி நின்றால் 15 சதவிகித வாக்குகள் மட்டுமே அவருக்கு கிடைக்கும். 2024 தேர்தல் மீது எடப்பாடி கவனம் செலுத்தவில்லை. அவரின் கவனம் எல்லாம் 2026 சட்டசபை தேர்தல் மீதுதான். 2024ல் மோடிக்கு இடம் வாங்கி கொடுப்பதில் எடப்பாடி கவனம் செலுத்தவில்லை. இதனால் மோடியை எடப்பாடி ஏமாற்ற பார்க்கிறார், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

English summary
Edappadi Palanisamy son Mithun Palanisamy playing without sense in Erode East by-election says Raveendran Duraisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X