ஸ்டாலின் ராணுவ கேப்டன் போல் தெரிகிறார்.. எடப்பாடி எப்படி இருந்தார்? நாஞ்சில் சம்பத் சர்ச்சை
சென்னை: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேண்ட் போடுவதற்காகவே வெளிநாடு சென்றதாக திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 2069 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் திமுக சார்பில் வழங்கப்பட்டன.
அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரக தொழில் துறை அமைச்சரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

அண்ணாமலையின் ஆளுநர் ஆசை
இந்த விழாவில் பேசிய திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத், "ரூ.5000 கோடியை முதலீடு செய்ய ஸ்டாலின் துபாய் சென்றிருப்பதாக நாட்டை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகிறார். என் தலைவனை அழுக்காக்கிதான் நீங்கள் மாநிலத் கவர்னர் ஆக வேண்டும் என்றால் அழுக்காக்கிவிட்டு செல்லுங்கள். ஆனால், அவதூறுகளை பரப்பாதீர்கள்.

மோடி, அமித்ஷா ஆயிரம் அவதாரம் எடுத்தாலும் ஊடுருவ முடியாது
அதிமுக இருந்த இடத்திற்கு பாஜகவை கொண்டு வந்து நிறுத்த அண்ணாமலை போடும் வேடத்தின் ஒரு காட்சிதான் இது. எந்த காலகட்டத்திலும் மற்றவர்களின் ஆதிக்கத்திற்கு எங்கள் தமிழகம் அடிமைபட்டதில்லை. இதுதான் நேற்றைய வரலாறு. இதனால் தான் மோடி, அமித்ஷா ஆயிரம் அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் ஊடுருவ முடியாது.

எடப்பாடி பேண்ட் போட வெளிநாட்டுக்கு சென்றார்
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டார். ஏற்கனவே இருந்த முதலமைச்சரும் வெளிநாட்டுக்கு சென்றார். அவர் பேண்ட் போடுவதற்காகவே வெளிநாட்டுக்கு சென்றார். அவர் பேண்ட் போட்டதை பார்த்தபோது ஹோட்டல் சர்வரை போன்றுதான் இருந்தார்.

ஸ்டாலின் கோட் ஷூட்டில் தலைவர் போல் இருக்கிறார்
எங்கள் தலைவர் ஸ்டாலின், தலைவரை போல், ராணுவத்தின் கேப்டனை போல் துபாய் நகரத்தின் உச்சியில் நின்றார். 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், மு.க.ஸ்டாலினை தனது இசைக்கூடத்திற்கு அழைத்துச் சென்று மூப்பில்லா தமிழ் தாயே என்ற பாடலை மு.க.ஸ்டாலினுக்கு போட்டுக் காண்பித்தார்.

ஸ்டாலினின் துபாயில் எழுதியது
உலகத்தின் உயர்ந்த சிகரமான துபாயின் புரூஜ் கலிபா உச்சியில் எங்கள் தமிழ் பண்பாட்டு அடையாளங்களை விளக்குகிற காணொளி காட்சியை போட்டுக்காட்டுகிறார்கள். அதை பார்த்த முதலமைச்சர் இனி இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்க வேண்டும், வடக்கில் எழுத உரிமை இல்லை என பதிவு செய்து இருக்கிறார்.
மோடியின் கனவு
5 மாதம் பெட்ரோல் விலை ஏறவில்லை. டீசல் விலை ஏறவில்லை. 5 மாநிலத் தேர்தல் முடிந்து பாஜக ஆட்சிக்கு வந்தவுடனே தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 ஏறுகிறது. 2014 ஆம் ஆண்டு மோடி அதிகாரத்துக்கு வரும்போது சமையல் எரிவாயு விலை ரூ.350. இன்று ரூ.1,050. 2024 ஆம் ஆண்டில் அனைத்து மாநிலக் கட்சிகளையும் சீரழித்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று மோடி கனவு காண்கிறார்." எனக் கூறினார்.