சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    Education department urges to prevent religious mobilization of students

    சென்னை: தமிழகத்தில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழகத்தில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதாகவும் 10 மாணவர்கள் கொண்ட குழுக்களை இந்து மாணவர் முன்னணி அமைத்து வருவதாகவும் புகார் எழுந்தன.

    Education department urges to prevent religious mobilization of students in Tamil Nadu

    பள்ளிகளில் மாணவர்களை அணி திரட்டுவதை கண்காணிப்பதற்கும், அவ்வாறு அணிதிரட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கையானது பள்ளி கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வித்துறை துணைச்செயலாளர் எஸ். வெங்கடேசன் அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் "இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களை அணி திரட்டுவது, மத ரீதியான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதேபோல் இந்து புராணங்கள், இந்து தலைவர்கள் வரலாறு தொடர்பான பிரச்சாரங்கள் நடைபெறுவதாகவும் அதற்காக 10 பேர் கொண்ட மாணவர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் கண்காணிக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

    எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.. இந்தியாவை மீண்டும் எதிர்க்கும் மலேசிய பிரதமர்.. முற்றும் மோதல்!எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.. இந்தியாவை மீண்டும் எதிர்க்கும் மலேசிய பிரதமர்.. முற்றும் மோதல்!

    எனவே மேற்கண்ட மத ரீதியான நடவடிக்கைகள் கல்வி நிலையங்களில் இருந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பான கூட்டங்களில் விவாதிக்க வேண்டும்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

    English summary
    Education department Deputy Secretary Venkatesan urges to prevent religious mobilization of students in Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X