சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விலையை கேட்டாலும் சரி.. உரித்தாலும் சரி கண்ணீரை வரவழைக்காத வெங்காயம்.. சென்னை, திருச்சியில் விற்பனை

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 10-12-2019 | Morning News | oneindia tamil

    சென்னை: எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சென்னை, திருச்சியில் விற்பன செய்யப்படுகிறது. இந்த வெங்காயம் உரித்தாலும் கண்ணீரை வரவழைக்காது.

    வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக விண்ணை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு வரத்து இல்லாததே காரணம் என சொல்லப்படுகிறது. வெங்காயத்தை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதித்தது.

    இந்த நிலையில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ 200 வரை விற்கப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் ரூ 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மும்பைக்கு

    மும்பைக்கு

    வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கப்பல் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து திருச்சி, சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டன.

    வெங்காயத்தின் விலை

    வெங்காயத்தின் விலை

    சென்னை கோயம்பேடு சந்தைக்கு முதல் கட்டமாக 60 டன் அளவிலான எகிப்து வெங்காயம் நேற்று வரத் தொடங்கியது. மேலும் 50 டன் எகிப்து வெங்காயம் இன்று வரவுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை குறைந்துள்ளது.

    நீண்ட நாட்கள் சேமிக்க முடியாது

    நீண்ட நாட்கள் சேமிக்க முடியாது

    எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் காரம் குறைவாகவும் கண் எரிச்சலை ஏற்படுத்தாத வகையில் இருக்கும். இந்த வெங்காயம் ஒன்றே 200 கிராம் முதல் 600 கிராம் வரை இருக்கும். இதை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்த முடியாது.

    வெங்காயம்

    வெங்காயம்

    10 முதல் 15 நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்கலாம். இந்த வெங்காயம் கிலோ 80 முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக வெங்காயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்பதை சென்னை கோயம்பேட்டில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஆய்வு மேற்கொண்டது. அது போல் திருச்சியிலும் சோதனை நடத்தப்பட்டது.

    English summary
    How will be Egypt onion in its taste? Onions from Egypt are imported as India has Onion Crisis and high price.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X