சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பத்து போதும்.. எட்டு தேறாது.. தினகரன் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் அவர்கள்!

டிடிவி தினகரன் மீது 8 வேட்பாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    சோகத்திலிருக்கும் அமமுக வேட்பாளர்கள்..டிடிவி கண்டுகொள்வாரா?

    சென்னை: கடைசியில அண்ணன் நம்மள இப்படி பண்ணிட்டாரே என்று அமமுக வேட்பாளர்கள் சோகமாகியுள்ளனராம். அத்தனை பேரும் அல்ல, 8 பேர் மட்டுமே.

    20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஒரு பேச்சு போன வருடமே தமிழகத்தில் நடந்தது. அப்போது, மதுரையில் 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தனார்.

    "இனிமேல் என்ன செய்யலாம்? நீங்ளே சொல்லுங்கள். வழக்கில் மேல்முறையீடு செய்யலாமா? அல்லது தேர்தலை சந்திக்கலாமா? எதுவானாலும் சொல்லுங்கள்... நான் தயாராகத்தான் இருக்கிறேன்" என்றார்.

     30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை!- நார்வே வானிலை மையம் 30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை!- நார்வே வானிலை மையம்

    சந்திக்க தயார்

    சந்திக்க தயார்

    இதற்கு ஆதரவாளர்கள், தேர்தல் செலவை கட்சி பார்த்து கொள்ளும் என்றால், நாங்கள் இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயார் என்றார்கள். இதைக் கேட்டதும் தினகரனுக்கு முதல் ஷாக்! ஏனெனில் அப்போதே செலவு செய்ய அமமுக தரப்பில் பணம் இல்லை என்று சொல்லப்பட்டது.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    பிறகுதான் கடந்த 18ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலும் , 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் செலவு செய்வது யார்? என்பதில் திரும்பவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    தாராளம்

    தாராளம்

    ஏனெனில் கண்டிப்பாக, அதிமுகவும், திமுகவும் பணத்தை உள்ளே இறக்கும்போது, அதற்கு சரிசமமாக நாமளும் இறக்க வேண்டும் என்று ஆதரவாளர்களும், வேட்பாளர்களும் டிடிவியிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இணையாக செலவு செய்ய தங்களிடம் இல்லை என்றும், அதனால் செலவு முழுவதையும் கட்சியே ஏற்று கொண்டால் நல்லா இருக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    பாதி செலவு

    பாதி செலவு

    ஆனால் அமமுக தலைமையோ, வேட்பாளர்கள் பாதி செலவு, கட்சி பாதி செலவு என்று சொல்லிவிட்டது. இதையடுத்து வேட்பாளர்களும் இருப்பதை வைத்தும், அங்கே இங்கே புரட்டியும் செலவை சமாளித்து தேர்தலையும் முடித்து விட்டனர். இந்த நிலையில் அடுத்த டிவிஸ்ட் அரங்கேறியுள்ளதாம்.

    ஒதுக்கப்படவில்லை

    ஒதுக்கப்படவில்லை

    அதாவது 18 பேரில் 10 பேருக்கு பேசிய காசை தினகரன் தரப்பு கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அதேசமயம், மற்ற 8 பேருக்கும் காசு தரப்படவில்லையாம். தலைமை தெரிவித்தபடி, நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ரூ.20 கோடியும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ரூ.8 கோடியும் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    மீதம் 8 வேட்பாளர்கள்

    மீதம் 8 வேட்பாளர்கள்

    ஏன் பத்து பேருக்கு மட்டும் காசு என்று விசாரித்தால், அதாவது 18 பேரில் இவர்களுக்குத்தான் ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், வாக்குகளைப் பெறும் சாத்தியம் உள்ளதாகவும் தலைமை கணக்கிட்டு இவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துள்ளது. மற்ற 8 பேரும் தேறாத நிலையில் இருப்பதால்தான் காசு தரப்படவில்லையாம். இதனால் இந்த எட்டு பேரும் ஷாக்காகியுள்ளனராம். அதேசமயம், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளனராம்.

    கடைசி கட்டம்

    கடைசி கட்டம்

    இனி அடுத்து நான்கு தொகுதி இடைத் தேர்தல் வருகிறது. அதிலும் இதே பார்முலாவை அமமுக பாலோ பண்ணுமா அல்லது.. கடைசி கட்டமாச்சே முழுக்க இறக்கி ஆழம் பார்த்து விடலாம் என நினைத்து காசை வாரியிறைக்குமா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் அமமுக ஒரு முடிவோடுதான் இருப்பது போல தெரிகிறது.

    English summary
    8 AMMK candidates are in frustration because TTV Dinakaran did not spend money in MP Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X