சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் படுகொலை- ஆளுநர் உரையில் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newest First Oldest First
12:08 PM, 2 Feb

ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையை நிறைவு செய்தார்.
11:58 AM, 2 Feb

விவசாயிகளுக்கு பயிர் இழப்பு காப்பீட்டு தொகையாக ரூ 9312 கோடி வழங்கப்பட்டுள்ளது
11:56 AM, 2 Feb

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் தொடர்ந்து நீடிக்கும்
11:55 AM, 2 Feb

ஆன்லைன் கல்வி- மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது
11:52 AM, 2 Feb

ஏழைகளுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
11:38 AM, 2 Feb

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
11:38 AM, 2 Feb

பக்தர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
11:36 AM, 2 Feb

பெரியாறு ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்பது தமிழகத்தின் கோரிக்கை
11:36 AM, 2 Feb

இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம்
11:36 AM, 2 Feb

மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கையுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழக அரசு வலியுறுத்தல்
11:34 AM, 2 Feb

பெண்ணையாறு நதிநீர் பிரச்சனைக்கான தீர்ப்பாயம் அமைக்க தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது
11:33 AM, 2 Feb

பொதுமக்கள் வீட்டிலிருந்தே அரசு உதவிகளை பெற 1100 என்ற தொலைபேசி எண் அறிமுகம்
11:31 AM, 2 Feb

தமிழக அரசின் நீர்ப்பாசனத் திட்டங்களை பட்டியலிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை
11:30 AM, 2 Feb

சட்டசபையில் இருந்து காங். எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு
11:30 AM, 2 Feb

பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்பிக்கை
11:28 AM, 2 Feb

காவிரியின் குறுக்கே கர்நாடகா எந்த ஒரு அணையும் கட்ட கூடாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு
11:28 AM, 2 Feb

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை
11:26 AM, 2 Feb

கொரோனா லாக்டவுன் கால நிவாரண உதவி., பொங்கல் பரிசு பணத்துக்கும் ஆளுநர் பாராட்டு
11:21 AM, 2 Feb

தமிழக சட்டசபை நடப்பு கூட்டத் தொடர் முழுவதையும் திமுக புறக்கணிக்கும்- மு.க.ஸ்டாலின்
11:21 AM, 2 Feb

7 தமிழர் விடுதலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்கவில்லை- ஸ்டாலின்
11:20 AM, 2 Feb

அதிமுக அரசு மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை- ஸ்டாலின்
11:19 AM, 2 Feb

மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது- ஸ்டாலின்
11:18 AM, 2 Feb

கொரோனாவை கட்டுப்படுத்தியதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது- ஆளுநர்
11:18 AM, 2 Feb

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு ஏன்? எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விளக்கம்
11:16 AM, 2 Feb

மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு. தமிழக அரசின் மினி கிளினிக் திட்டத்துக்கும் ஆளுநர் பாராட்டு.
11:11 AM, 2 Feb

தமிழக ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு- சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
11:09 AM, 2 Feb

எனது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் 5 நிமிடம் வெளிநடப்பு செய்யுங்கள்- ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
11:07 AM, 2 Feb

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது- ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
11:06 AM, 2 Feb

சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் வாக்குவாதம்.
11:02 AM, 2 Feb

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது
READ MORE

Election 2021: Tamil Nadu Assembly to meet today
English summary
Tamil Nadu Assembly will meet here on today for the 2021- first session with the customary Governor''s address.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X