சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவுக்கு எதிரான அதிமுகவின் 'டிவி' விளம்பரங்களுக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவுக்கு எதிரான அதிமுகவின் டிவி விளம்பரங்களுக்கு தடை- வீடியோ

    சென்னை: திமுகவுக்கு எதிராக தொலைக்காட்சிகளில் அதிமுக வெளியிட்ட தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களில் நடக்க உள்ளது. வரும் 18ம் தேதி தமிழகத்தின் தலை எழுத்தையும், இந்தியாவின் தலை எழுத்தையும் தீர்மானிக்கும் தேர்தல் தமிழகத்தில் நடக்க உள்ளது.

    Election commission ban aiadmks tv advertisement against DMK

    ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையே சேதுசமுத்திர திட்டம்தான்... ஸ்டாலின் பிரச்சாரம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையே சேதுசமுத்திர திட்டம்தான்... ஸ்டாலின் பிரச்சாரம்

    இந்த தேர்தலில் வெற்றி பெறவதற்காக திமுக மற்றும் அதிமுக இடையே மிகப்பெரிய பிரச்சார யுத்தம் நடந்து வருகிறது. அதிமுகவிற்கு எதிராக திமுகவும், திமுகவுக்கு எதிராக அதிமுகவும் தொலைக்காட்சிளில் விளம்பரங்களை ஒளிபரப்பி வருகின்றன.

    இந்நிலையில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் திமுகவுக்கு எதிராக அதிமுகவினர் வெளியிடும் தேர்தல் விளம்பரங்களில் விதிமீறல் இருப்பதாகவும், எனவே அத்தகைய விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த புகாரை ஏற்று தமிழக தேர்தல் ஆணையம், திமுகவிற்கு எதிராக தொலைக்காட்சிகளில் வீதிமீறலுடன் வெளியிடப்பட்டுள்ள அதிமுகவின் விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிமீறலுக்கு உள்ளான திமுகவுக்கு எதிரன தேர்தல் விளம்பரங்களை தடையை மீறி தொடர்ந்து ஒளிபரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    English summary
    Tamil Nadu: Election commission ban aiadmk's tv advertisement against DMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X