சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு எதிரான திமுகவின் 'டிவி' விளம்பரங்களுக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவுக்கு எதிரான திமுகவின் டிவி விளம்பரங்களுக்கு தடை- வீடியோ

    சென்னை: அதிமுகவுக்கு எதிரான திமுகவின் விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிப்பது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

    election commission ban dmks tv advertisement against aiadmk

    இதனால் இருகட்சிகளும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி, தொலைக்காட்சிகளில் மக்களை கவரும் வகையிலான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

    இதில் விதிமீறலுடன் ஒளிபரப்பாகும் அதிமுகவின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று நேற்று அதிமுகவின் விதிமீறலுக்கு உள்ளான தேர்தல் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

    ஐடி ரெய்டில் சிக்கிய 'துண்டு சீட்டு'.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருக்கு சம்மன் ஐடி ரெய்டில் சிக்கிய 'துண்டு சீட்டு'.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருக்கு சம்மன்

    இந்நிலையில் அதிமுகவும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் விளம்பரங்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது. இந்த மனுவில் பொய் வாக்குறுதிகள், ஆதாரமற்ற புகார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக புகார் தெரிவித்து இருந்தது. இந்த புகாரை ஏற்று விதிமீறலுக்கு உள்ளான திமுக, காங்கிரஸ் விளம்பரங்களை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

    English summary
    Tamilnadu election commission ban dmk's tv advertisement against aiadmk
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X