சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் இல்லை.. காரணம் இதுதான்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்க முடியாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.

Election commission denies to allot double candle symbol to Naam Tamilar

அதேநேரம், லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்க முடியாது என தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மேகாலயாவிலுள்ள கட்சிக்கு ஏற்கனவே, இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்க முடியாது என்று, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மதுரையில் ஏன் போட்டியிடலை.. தொண்டர்கள் அப்செட்.. அழகிரிக்கு பயந்து நடுங்குகிறதா திமுக? மதுரையில் ஏன் போட்டியிடலை.. தொண்டர்கள் அப்செட்.. அழகிரிக்கு பயந்து நடுங்குகிறதா திமுக?

இந்த சின்னத்தில்தான், கடந்த சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இதை ஒரு காரணமாக ஏற்க முடியாது என நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். தேசிய கட்சிகளுக்குதான் ஒரே மாதிரி சின்னங்கள் ஒதுக்கப்படுவதில்லை. பல மாநிலங்களில் சைக்கிள் சின்னத்தில் மாநில கட்சிகள் போட்டியிட முடிகிறதே என்று இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

English summary
Indian Election commission denied to allot double candle symbol to Naam Tamilar party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X