சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையமே இதுதான் நடுநிலையா.. இடைத்தேர்தலை நடத்துவதில் என்னதான் பிரச்சனை.. ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த சட்ட போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது என்பதுதான் மிகப்பெரிய வருத்தமான விஷயம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த கூட சட்ட போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது என்பதுதான் மிகப்பெரிய வருத்தமான விஷயம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதனுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. 22 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஆணையம் இந்த 4 தொகுதிகளுக்கும் இன்னும் தேர்தல் அறிவிக்காமல் இருப்பது குறித்து திமுக நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது .

Election Commission has to announce election date for 3 constituencies says M K Stalin

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேட்டியில், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்காதது தேர்தல் ஆணையம் செய்த பெரிய தவறு. அவர்கள் செய்த ஒரு தவறால் முதல் கோணல் முற்றிலும் கோணல் போல் ஆகிவிட்டது.

ராகுல் காந்தியை ஈர்க்க இதுதான் காரணம்.. வயநாடு தொகுதி, ஒரு பார்வை!

3 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்த கூடாது என்று நீதிமன்றம் சொல்லவில்லை. இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த நீதிமன்றம் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இதோ இப்போது இரண்டு வழக்குகள் முடித்தும் வைக்கப்பட்டுள்ளது.

3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த எந்த கோர்ட்டும் தடை உத்தரவும் பிறக்காத நிலையில், தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்துள்ளதன் மூலம் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடுநிலையாக செயல்படவில்லை. என்பது தெளிவாகிறது.

பா.ஜ.க அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக செயல்படாமல் அச்சமின்றி சட்ட கடமையை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் முன்னுக்கு வர வேண்டும். தேர்தல் ஆணையம் மீது இருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த சட்ட போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது என்பதுதான் மிகப்பெரிய வருத்தமான விஷயம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

English summary
Election Commission has to announce election date for 3 constituencies says DMK chief M K Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X