சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூரில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் வழக்கு.. எப்ஐஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: வேலூரில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வேலூர் காட்பாடியில் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனும் வேலூர் எம்பி தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த் பள்ளி மற்றும் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.

Election Commission is going to file case in Vellore money seizure incident

அப்போது அவர்களது வீட்டிலிருந்து ரூ 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனிலும் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த பணக் கட்டுகளில் தொகுதி எண், வார்டு எண், தெரு பெயர் உள்ளிட்டவை இருந்தன. இந்த நிலையில் வேலூரில் தேர்தலை நிறுத்த அதிமுக, பாஜக, பாமக , உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை! பாஜக மீது திருமுருகன் காந்தி பரபரப்பு புகார் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை! பாஜக மீது திருமுருகன் காந்தி பரபரப்பு புகார்

இந்த நிலையில் இதுகுறித்து தமிழக தேர்தல் அதிதாரி சத்யபிரத சாஹூ கூறுகையில் வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதும் எப்ஐஆர் பதிவு செய்யப்படும்.

யார் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்பது வழக்கு பதிவு செய்யப்படும் போதுதான் தெரியும் என்றார். இதனால் வேலூர் தொகுதி தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

English summary
Election Commission is going to file case for money seizure in Vellore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X