சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 39.40 லட்சம்.. தமிழகத்தில் அதிக வாக்காளர் உள்ள தொகுதி எது? வரைவு பட்டியலில் சுவாரசியம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சியில் 39.40 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தகவல் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

    தமிழகம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. டிசம்பர் 15 வரை திருத்தம் செய்யலாம் - வீடியோ

    தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று வெளியிட்டார்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்.. 6.10 கோடி வாக்காளர்கள்.. ஆண்களை விட பெண்கள் அதிகம் தமிழகத்தில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்.. 6.10 கோடி வாக்காளர்கள்.. ஆண்களை விட பெண்கள் அதிகம்

    சென்னை நிலவரம்

    சென்னை நிலவரம்

    இந்த காலக்கட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 40 ஆயிரத்து 407 என்ற அளவில் உள்ளது.

    பெண்கள் அதிகம்

    பெண்கள் அதிகம்

    சென்னையில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 39 ஆயிரத்து 694. சென்னையில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 99 ஆயிரத்து 995 என்ற அளவில் உள்ளது.

    தமிழக நிலவரம்

    தமிழக நிலவரம்

    தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 கோடியே 9 லட்சத்து, 25,603 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 3 கோடியே ஒரு லட்சத்து 12,370 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 6,385 மூன்றாம் பாலினத்தவர் வாக்குகள் உள்ளன.

     பூத்தில் எவ்வளவு

    பூத்தில் எவ்வளவு

    இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், குறைந்த பட்சம் 800 முதல் அதிகபட்சம் 1000 வாக்காளர்கள் ஒரு பூத்தில் இருப்பார்கள் என்றார்.

    அதிகபட்ச வாக்காளர்கள்

    அதிகபட்ச வாக்காளர்கள்

    தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையடுத்த, சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    English summary
    Election commission releases tentative electorate numbers for Chennai. The total electorate in Chennai is 39.40 lakhs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X