சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையம் பாஜகவின் நபராகவே செயல்படுகிறது... திருமுருகன் காந்தி ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமுருகன் காந்தி ஆவேச பேட்டி-வீடியோ

    சென்னை: பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதிய கலவரம் ஒரு திட்டமிட்ட கலவரம் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

    சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதி கலவரம் ஒரு திட்டமிட்ட கலவரம் ஆகும், இந்த கலவரத்தை அந்தப் பகுதியில் இந்து முன்னணி பொறுப்பாளர் ராஜசேகரன் தான் நடத்தினார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதாகக் கூறினார்.

    Election Commissioner Behave like a dishonest Says Thirumurugan Gandhi

    மேலும், சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும், விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்திற்கு ஓட்டளிக்க கூடாது என்பதற்காகவே அந்த கிராமத்தில் சாதிய மோதலை இந்துத்துவா அமைப்புகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் திட்டமிட்டு இக்கலவரத்தில் முக்கிய காரணமாக விளங்குகிறது என்றும் கூறினார்.

    Election Commissioner Behave like a dishonest Says Thirumurugan Gandhi

    தேர்தல் ஆணையம் பாஜகவின் நபராகவே செயல்படுகிறது எனவே அப்பகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றார். இதேபோல் கன்னியாகுமரியில் பாஜக தூண்டுதலின் பேரில் கிறிஸ்துவ மக்களின் ஓட்டுரிமை மறுக்கப்பட்டதாகவும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடு, மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா? ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி.. பரபரப்பு தகவல் ஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா? ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி.. பரபரப்பு தகவல்

    குறிப்பாக, தேர்தல் ஆணையர் ஒரு நேர்மையற்றவர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இச்சந்திப்பின் போது விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி குடந்தை அரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    English summary
    Thirumurugan gandhi said that Election Commissioner is a dishonest
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X