சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 ஆண்டுகளாக திட்டமிட்டும்... குழப்பமோ குழப்பம்... ஆணையம் மீது சீறும் ஆசிரியர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக திட்டமிட்டும் இறுதியில் பல்வேறு குழப்பங்களை எதிர்கொண்டு வருகிறது மாநில தேர்தல் ஆணையம்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராதது, உணவு வழங்காதது, மீடியா சென்டர் அமைக்காதது, என பல விவகாரங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஒரே நாளில் 2 முறை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடக்கும் குளறுபடிகள் குறித்து புகார் கூறியது கிடையாது.

அட.. அமமுகவா இப்படி!.. சத்தமின்றி வேலை பார்த்த டிடிவி தினகரன்.. எதிர்பார்த்ததை விட செம ஆதரவு! அட.. அமமுகவா இப்படி!.. சத்தமின்றி வேலை பார்த்த டிடிவி தினகரன்.. எதிர்பார்த்ததை விட செம ஆதரவு!

சொதப்பல்

சொதப்பல்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் கடந்த 3 ஆண்டுகளாக திட்டமிட்டும், வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகம் முழுவதும் பல குழப்பங்கள் அரங்கேறியுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் இயற்கை உபாதைகள் கழிக்கக் கூட போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது முதல் புகார்.

குழப்பம்

குழப்பம்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மீடியா சென்டர் அமைக்கப்பட்டால் முடிவுகளை குழப்பமின்றி தெளிவான முறையில் விரைவாக அறிந்திருக்க முடியும். ஆனால் இந்த விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் போதிய அக்கறை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

திண்டுக்கல், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு உணவு தராததால் அவர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். உணவு ஏற்பாடு செய்வது என்பது தலையாய பணி. ஆனால் அதில் கூட தேர்தல் ஆணையம் சொதப்பியது.

திடீர் முடிவு

திடீர் முடிவு

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து இரண்டு நாட்களாக நடப்பதால், சுழற்சி முறையில் ஆசிரியர்களை பணி அமர்த்துவது பற்றி இப்போது பரிசீலித்து வருகிறது தேர்தல் ஆணையம். மூன்று ஆண்டுகளாக விட்டு விட்டு இப்போது பரிசீலனை என்பது நகைப்புக்குரியதாக தெரிகிறது. இப்படி பல விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் குழப்பங்களை சந்தித்து வருகிறது.

English summary
election duty teachers complaint about state election commission
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X