சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆசை.. தோசை.. அப்பளம்.. வடை.. தேர்தல் அறிக்கைகள் கூட ஓர் லஞ்சமே!

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் ஒரு வகையில் லஞ்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Google Oneindia Tamil News

சென்னை: பெரும்பாலான கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு விட்டன. எதற்குத்தான் இந்த தேர்தல் அறிக்கைகள், யாருக்காக இந்த தேர்தல் அறிக்கைகள்?
தேர்தலின்போது அதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு தங்களது நிலையை தெளிவுபடுத்தி தேர்தல் அறிக்கையை வெளியிடுவது ஒரு மரபாக இருந்து வருகிறது.

இந்த தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளையும் லட்சியங்களையும் தெளிவுபடுத்துவதோடு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எவ்வாறு அரசை நடத்துவோம் என்பதையும் எடுத்து கூறும் அறிக்கையாக அது திகழும்.

 தேர்தல் அறிக்கைகள்

தேர்தல் அறிக்கைகள்

தங்கள் பதவிக்காலத்தில் தேசத்தின் வளர்ச்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலைகள், பாலங்கள், சாக்கடைகள், கால்வாய்கள் சீரமைப்பு, தட்டுப்பாடற்ற குடிநீர், கிராமப்புற மருத்துவசதி,பெண் உரிமையை காப்பது, நேர்மையான நல்லாட்சி தருவது போன்றவற்றை உத்தரவாதம் செய்வதாக தேர்தல் அறிக்கைகள் தெரிவிக்கும்.

 தமிழகம்தான்

தமிழகம்தான்

பொதுமக்கள் இந்த தேர்தல் அறிக்கைகளை வைத்து, அரசியல் கட்சிகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் வாக்களிக்கும் ஓர் ஆரோக்கியமான ஜனநாயக முறை இந்தியாவில் அன்று இருந்தது. ஆனால் இந்த நம்பிக்கையை தரைமட்டமாக்கியது முதன்முதலில் தமிழகம்தான்.

ரூபாய்க்கு

ரூபாய்க்கு

1967-ல் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அகற்ற அப்போதைய திமுக கூட்டணி ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதனால் ஒரு கிலோ அரிசி ரேசன் கடைகளிலே பல மணி நேரம் கால் கடுக்க நிற்கவேண்டிய அவலமான சூழ்நிலையை அந்த தேர்தல் அறிக்கை பயன்படுத்தி கொண்டு, அரிசி பிரச்சனையால் துவண்டு போயிருந்த தமிழக மக்களும் ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி கிடைக்கும் என்ற ஆசையோடு திமுகவுக்கு அமோக வெற்றியை தந்து ஆட்சி கட்டிலில் அமர்த்தியது.

 அம்மாவின் இலவசங்கள்

அம்மாவின் இலவசங்கள்

ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி நடைமுறையில் தர முடியாமல் போயிற்று. இதுவே ரூபாய்க்கு 1 நிச்சயம், 3 படி லட்சியம் என பிளேட்டை மாற்றி போட்டார்கள். வாக்காளர்களிடம் முதன்முறையாக வைக்கப்பட்ட இவ்வாக்குறுதிதான் இன்று பெரும்பாலான அரசியல் கட்சிகளால் பயன்படுத்தப்படுகிறது. கடைசியில் இது இதுதான் தரவேண்டும் என்ற நிர்ணயம்கூட இல்லாமல் "அம்மா"வின் இலவசங்கள் வரிசைக்கட்டி நின்றன.

சோம்பேறிகள்

சோம்பேறிகள்

ஆளுக்கொரு கட்சிகள் இந்த தேர்தல் தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளன. கருவறை முதல் கல்லறை வரை ஒரு மனிதன் உழைக்காமலேயே எல்லா வசதிகளையும் சலுகைகளையும் பெறக்கூடிய வகையில் இந்த வாக்குறுதிகள் அமைந்துள்ளன.

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

இந்த அரசியல் கட்சிகள் தமிழகத்தின எதிர்காலத்தை பற்றி துளியளவும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளை தவிர புதிய அணைகளே இப்போது இல்லை. நேருஜி காலதில் நிர்மாணிக்கப்பட்ட பெரிய தொழிற்சாலைகளை தவிர வேறு அமைக்கப்படவே இல்லை.திட்டங்கள்

 நேர் எதிர்

நேர் எதிர்

ஆக, எதிர்கால தமிழகத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படுகின்ற திட்டங்களாக இல்லாமல் தங்களுக்கு ஓட்டுப் போடும் வாக்காளர்களை பற்றி மட்டுமே இந்த அரசியல் கடசிகள் கவலைப்படுகின்றன. இது அடிப்படையான அரசியல் தர்மத்திற்கும் ஆரோக்கிய ஜனநாயகத்திற்கும் நேர் எதிரானதாகும்.

 லஞ்சமே!

லஞ்சமே!

ஆசை காட்டலையும், பொய்யான வாக்குறுதிகளையும் ஒவ்வொரு முறையும் தந்துகொண்டிருப்பதும் தொடர்கிறது. இலவசங்களை தந்து மக்களை சோம்பேறிகள் ஆக்கும் நீள்கிறது. எங்களுக்கு ஓட்டு போட்டால் உங்களுக்கு இவற்றை தருகிறோம் என்று சொல்வதற்கும்., எங்களுக்கு ஓட்டுப்போட்டால் இப்போதே உங்களுக்கு 5 ரூபாய் தருகிறோம் என்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஆக மொத்தம் தேர்தல் அறிக்கைகள் கூட ஒரு வகையில் லஞ்சமே ஆகும்!

English summary
The benefits of Election Manifestoes are nothing. In a sense, all of these Manifestoes are just like a bribe
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X