சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட இவங்க மூணு பேருக்குள்ள இத்தனை ஒற்றுமைகளா..

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக, அதிமுக, பாமக தேர்தல் அறிக்கைகளில் என்ன ஒற்றுமைகள்

    சென்னை: அதிமுக மற்றும் திமுக தேர்தல் அறிக்கைகளில் சில ஒற்றுமைகள் அமைந்துள்ளன. இதுமட்டுமில்லை பாமகவின் 10 கோரிக்கைகளில் சில கோரிக்கைகளும் ஒரே மாதிரியானவை.

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் முக்கியமாக கருதப்படுவது தேர்தல் அறிக்கைகள்தான்.

    மக்களை கவர்வதற்காக தேர்தல் அறிக்கைகளை குழுக்களை அமைத்து கட்சியினர் தயார் செய்துள்ளனர். இதில் அந்தந்த மாநிலத்தில் பிரதானமாக பேசப்பட்ட விவகாரங்களும் அடங்கும்.

    மோடி அரசு நடத்தி வரும் கீழடி பெயரில் மோசடி.. தமிழிசை பரபரப்பு ட்வீட் மோடி அரசு நடத்தி வரும் கீழடி பெயரில் மோசடி.. தமிழிசை பரபரப்பு ட்வீட்

     திட்டங்கள்

    திட்டங்கள்

    அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றைய தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அதில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட், கல்விக் கடன்கள் ரத்து, நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் ரத்து, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வெளியிட்டார்.

     எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    இதையடுத்து நேற்றை தினமே அதிமுகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. திமுக ஏறக்குறைய பெரும்பாலான தமிழக பிரச்சினைகளை கவர் செய்து விட்ட நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    [குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள்.. ஒரு விறுவிறு தகவல் தொகுப்பு]

     தேர்தல் அறிக்கை

    தேர்தல் அறிக்கை

    அதில் ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1500, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், புதுவை தனிக்கு மாநில அந்தஸ்து, எம்ஜிஆர் திறன் வளர்ச்சி திட்டத்தில் வேலைவாய்ப்புகள், தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை அறிக்கைகளாக வெளியிடப்பட்டன.

     ஒரே மாதிரியானவை

    ஒரே மாதிரியானவை

    இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் ஒரே மாதிரி இடம்பெற்றுள்ளன. அவை

    • மாணவர்களின் கல்விக் கடன் ரத்து
      • மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து
        • கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது
          • பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது
            • தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு
              • கேபிள் டி.வி. சேவைக்கான கட்டணம் குறைப்பு
                • காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது
                  • தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக்க நடவடிக்கை
                  • உள்ளிட்ட அம்சங்கள் ஒன்றாக இடம்பெற்றுள்ளன.

     பாமகவின் 10 கோரிக்கைகள்

    பாமகவின் 10 கோரிக்கைகள்

    திமுக, அதிமுகவின் கோரிக்கைகள் மட்டுமில்லைங்க. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற போது பாமக அளித்த 10 கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் ஒரே மாதிரியானவை.

    • ஏழு தமிழர்கள் விடுதலை
      • காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுதல்
        • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
          • நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு
            • தமிழ்நாட்டின் 20 பாசனத் திட்டங்கள் மற்றும் கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டம்

            • ஆகிய கோரிக்கைகளும் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுடன் ஒத்து போகின்றனவாம்.

    English summary
    ADMK, DMK releases election manifestos yesterday. It has some identical things. It also little bit more or less same as PMK's demand.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X