சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ம்ஹூம்... கிளீன் போல்ட்..தமிழகம், கேரளா முடிவுகளால் அதிர்ச்சியில் பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results 2019: தமிழகத்தில் வாஷ் அவுட்டான பாஜக!- வீடியோ

    சென்னை/ திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல்களில் வட இந்தியாவில் சுனாமி போல தொகுதிகளை அள்ளி சுருட்டியது பாஜக. ஆனால் தென்கோடி முனையில் உள்ள தமிழகத்திலும் கேரளாவிலும் ஒரு இடத்திலும் கூட பாஜகவால் வெல்ல முடியாதது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் 2014-ல் மோடி அலை வீசியது. ஆனால் தமிழகம், கேரளாவில் அந்த அலை எடுபடவில்லை.

     புதுக் கட்சி மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் கொடுத்த சின்ன உற்சாகம்.. பல இடங்களில் நல்ல ஓட்டு புதுக் கட்சி மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் கொடுத்த சின்ன உற்சாகம்.. பல இடங்களில் நல்ல ஓட்டு

    அள்ளிய அதிமுக

    அள்ளிய அதிமுக

    அந்த தேர்தலில் அதிமுக அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றி தேசிய அளவில் 3-வது கட்சியாக உருவெடுத்தது. கேரளாவில் காங்கிரஸ் 6; இடதுசாரிகள் - 5; கேரளா காங்கிரஸ்-3 இடங்களில் வென்றன. இத்தனைக்கும் தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி என மெகா கூட்டணி அமைத்தது. கேரளாவில் ஈழவர் வாக்குகளை குறிவைத்து வெள்ளாபள்ளி நடேசன் மூலம் தனிக்கட்சி தொடங்கி களத்தை எதிர்கொண்டது பாஜக. ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர்தான்.

    அதிமுகவுடன் கூட்டணி

    அதிமுகவுடன் கூட்டணி

    தற்போதைய தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்தது. கேரளாவில் சபரிமலையில் பெண்களுக்கும் அனுமதி விவகாரத்தை கையில் வைத்துக் கொண்டு கால் பதிக்க துடித்தது பாஜக.

    கடைசியில் அவரும் ஜெயிக்க போகிறார்.. இனி எங்களுக்கு என்ன கவலை.. சந்தோசத்தில் பாஜக! கடைசியில் அவரும் ஜெயிக்க போகிறார்.. இனி எங்களுக்கு என்ன கவலை.. சந்தோசத்தில் பாஜக!

    பாஜகவுக்கு இடம் இல்லை

    பாஜகவுக்கு இடம் இல்லை

    ஆனால் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. வட இந்தியாவில் பல மாநிலங்களில் விஸ்வரூபத்தை காட்டிய பாஜகவுக்கு தென்கோடி முனையில் உள்ள இந்த இரு மாநிலங்களும் பூஜ்ஜியத்தையே கொடுத்திருக்கின்றன. தமிழகத்தில் திமுகவும் கேரளாவும் காங்கிரஸ் கூட்டணியும் பெரும் வெற்றியை பெற்றுள்ளன.

    பாஜக மீது வெறுப்பு

    பாஜக மீது வெறுப்பு

    தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவின் தமிழர் விரோத நடவடிக்கைகள் அத்தனை வெறுப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. கேரளாவில் இடதுசாரிகள்- காங்கிரஸ் இரண்டுமே வலிமையான வாக்கு வங்கியை வைத்துள்ளன. இரண்டுமே பாஜக எதிர்ப்பு அரசியலால்தான் நிலைத்து நிற்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்! செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!

    English summary
    Tamilnadu and Kerala State voters said that no space for BJP again in the Loksabha Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X