சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களவை தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது... இது ராகுலின் தோல்வியா அல்லது மோடியின் வெற்றியா?

மக்களவை தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட தனிப்பட்ட தோல்வியாகவே விமர்சிக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தியின் தோல்வியா ? அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியா எனும் கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகவே வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைவது உறுதியாகியுள்ளது.

நன்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 333 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 96 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. மற்றக் கட்சிகள் 113 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

ஆஹா அபாரம்.. ஸ்ரீபெரும்புதூர், பொள்ளாச்சியில் 3-ஆவது இடத்துக்கு வந்த மநீம.. அமமுகவுக்கு கடைசி இடம் ஆஹா அபாரம்.. ஸ்ரீபெரும்புதூர், பொள்ளாச்சியில் 3-ஆவது இடத்துக்கு வந்த மநீம.. அமமுகவுக்கு கடைசி இடம்

ராகுலின் தோல்வி

ராகுலின் தோல்வி

காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. காரணம் இந்த தேர்தல் மோடி வெர்சஸ் ராகுல் என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது.

ராகுலின் பிரச்சாரம்

ராகுலின் பிரச்சாரம்

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் ராகுல். அப்போது மோடி அரசை கடுமையாக விமர்சித்தார். இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபட்டார். இளைஞர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். புதிய யுக்திகளை கையாண்டார். காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுலே பார்க்கப்பட்டார்.

மோடியின் வெற்றியா?

மோடியின் வெற்றியா?

இருப்பினும் இந்த தேர்தலில் மோடி மீண்டும் ஜெயித்திருப்பது, பாரதிய ஜனதா கட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிகையை காட்டுகிறதா? அல்லது காங்கிரஸ் கட்சியை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்பதை பரைசாற்றுகிறதா என்ற கேள்வி நாடு முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. காரணம் மத்திய பாரதிய ஜனதா அரசு மீது பெரும்பான்மை மக்களுக்கு அதிருப்தி இருந்தது உண்மையே. குறிப்பாக சிறுபான்மை மக்கள் மோடி அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

காங்கிரஸ் மீதான கோபம்

காங்கிரஸ் மீதான கோபம்

அப்படி இருந்தும் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றிப் பெற்றிருக்கிறது என்றால், அது காங்கிரஸ் கட்சி மீதான கோபம் மக்களுக்கு இன்னும் போகவில்லை என்பதையே காட்டுகிறது. ராகுல் காந்தியை ஏற்றாலும், காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஏற்க மக்கள் தயாராக இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதனால் தான் மதவாதக் கட்சி என எதிர்க்கட்சிகளால் முத்திரைக் குத்தப்பட்டாலும், கடுமையான விமர்சனத்துக்கு ஆளானாலும் பாரதிய ஜனதா மீண்டும் அரசமைக்கிறது.

குறைந்த தீமைகள்

குறைந்த தீமைகள்

இந்திய நாட்டுக்கு காங்கிரஸ் செய்த தீமைகளை காட்டிலும், பாரதிய ஜனதா செய்த தீமைகள் குறைவு எனும் அடிப்படையிலேயே பெரும்பான்மை மக்கள் முடிவு எடுத்திருக்கிறார்கள். எனவே கடந்த தேர்தலை போல் இது மோடி எனும் தனி மனிதனின் வெற்றியாக இப்போது கொண்டாட முடியாது. எனவே, ராகுல் காந்திக்கு இந்த தேர்தல் வெற்றிகரமான தோல்வியே. இந்த தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சியை எப்படி அவர் மீட்கப் போகிறார் என்பதே அடுத்தக் கேள்வி.

English summary
After the elections results, a debate started in medias that was is a failure of Rahul ? or success of Modi?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X