சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மலை பாங்கான இடத்தில் குட்டி ஈன்ற தாய்.. மழை பெய்ததால் அரண் போல் நிற்கும் யானைகள்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: யானை ஒன்று குட்டி ஈனும் வீடியோ வைரலாகிறது. அந்த சமயம் பார்த்து மழை பெய்யவே மற்ற யானைகள் சேர்ந்து நின்று அரணாக குட்டியை பாதுகாக்கும் காட்சிகளும் வைரலாகின.

Recommended Video

    மலை பாங்கான இடத்தில் குட்டி ஈன்ற தாய்.. மழை பெய்ததால் அரண் போல் நிற்கும் யானைகள்.. வைரல் வீடியோ

    மனிதர்களுக்கு கர்ப்ப காலம் என்பது 10 மாதங்களாகும். இதில் 7 மாதத்திலிருந்தே பிரச்சினைகளுக்கேற்ப குழந்தைகள் பிரசவிக்கப்படுகின்றன. விலங்குகளுக்கும் கர்ப்ப காலம் இருக்கிறது.

    Elephant gives birth to young one in a rainy day, Video Goes Viral

    அதில் யானைக்கு 22 மாதங்களாகும். பிறக்கும் குட்டி யானை 110 கிராம் எடையுடன் பிறக்கும். நீளமான கர்ப்ப காலம் இருக்கும் பாலூட்டிகளில் ஒன்று யானையாகும்.

    இந்த நிலையில் யானை குட்டி போடும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு வெட்ட வெளியில் யானை ஒன்று குட்டி போட தயாராகிறது. அப்போது குட்டியை வெளியே தள்ள அழுத்தம் கொடுக்கிறது.

    அப்போது ஒரு வெள்ளை நிற பையிலிருந்து குட்டி கீழே விழுக்கிறது. அந்த வெள்ளை நிற படலத்தை கிழித்து கொண்டு குட்டி உருளுகிறது. அப்போது அங்கு மழை பெய்கிறது.

    உடனே உடனிருக்கும் யானைகள் தாய் யானையுடன் சேர்ந்து அந்த குட்டியை சுற்றி அரண் போல் நிற்கின்றன. இதனால் அந்த குட்டி மழையில் நனையாமல் பாதுகாக்கப்படுகிறது. இது புது வரவான குட்டி மீது அந்த யானைகளுக்கு இருக்கும் பாசத்தை காட்டுகிறது.

    English summary
    A video goes viral that Elephant gives birth to young one.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X