சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கிக்கடன் இஎம்ஐ செலுத்த அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு ... ரிசர்வ் வங்கி குட்நியூஸ்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கிக்கடன் இஎம்ஐ செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Recommended Video

    3 மாத இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கக் கூடாது.. உச்சநீதிமன்றம் பரிந்துரை

    வங்கி கடன் தவணை செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க கோரி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    emi moratorium may be extended one more time : RBI reply on high court

    அவர் தாக்கல் செய்த மனுவில், ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு மாறாக கடனை வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மகளிர் சுய உதவிக்குழுக்கள் அளிக்கும் புகார்களை பெற மாவட்ட வாரியாக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை நீட்டிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

    வேதரத்தினத்தை இழுத்த திமுக.. ஜீவஜோதியை கையில் எடுக்கும் பாஜக.. அடுத்து என்னவெல்லாம் ஆகுமோ?!வேதரத்தினத்தை இழுத்த திமுக.. ஜீவஜோதியை கையில் எடுக்கும் பாஜக.. அடுத்து என்னவெல்லாம் ஆகுமோ?!

    அப்போது ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், "வங்கிகள் மீதான புகாரை விசாரிக்க ஏற்கனவே மாவட்டம் தோறும் அம்புட்ஸ்மேன் என்ற அதிகாரிகள் உள்ளனர். கடன் தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிப்பது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. எனினும் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழு ஆராயந்து வருகிறது" இவ்வாறு கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

    English summary
    RBI on madras high court: : emi moratorium may be extended one more time. An appointed committee is investigating the matter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X