சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் இதுவரை 1,12,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புது தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 1,12,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் பங்கேற்ற 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும் மற்றும் 1000 சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின் இதனை கூறினார்.

துடித்த அதிமுக.. 2024ல் ஆட்சியை கவிழ்க்க பிளான்.. இதனால்தான் எடப்பாடி சப்போர்ட்டா? பற்ற வைத்த புள்ளி துடித்த அதிமுக.. 2024ல் ஆட்சியை கவிழ்க்க பிளான்.. இதனால்தான் எடப்பாடி சப்போர்ட்டா? பற்ற வைத்த புள்ளி

கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;

திமுகவிற்கு 30.10%

திமுகவிற்கு 30.10%

தேர்தலில் திமுகவிற்கு வாக்களிப்போம் என்று 30.10% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவை விட 9.94 சதவிகிதம் பின் தங்கியிருக்கிறது திமுக.

1,12,500 நபர்களுக்கு வேலை

1,12,500 நபர்களுக்கு வேலை

''இதுவரையில், 1,12,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதத்திற்குள் ஒன்றரை இலட்சம் இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 11 தொழில் பயிற்சி நிலையங்கள் (ITI) தொடங்கி உள்ளோம். ''

போட்டித் தேர்வுகள்

போட்டித் தேர்வுகள்

''டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தலா ரூ.30 கோடி மதிப்பீட்டில் அனைத்து தொழில் பயிற்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.''

10 மணி முதல் மாலை 5 மணி

10 மணி முதல் மாலை 5 மணி

''போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.30 முதல் 5.30 வரையும், வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளின் ஒரு பகுதியாக தொடர் தேர்வுகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். SSC, TNPSC தேர்வுகள், TNUSRB, IBPS மற்றும் RRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.''

English summary
Youth Welfare and Sports Development Minister Udhayanidhi Stalin said that 1,12,500 people have been given employment in Tamil Nadu so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X