சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனியார் வசம் செல்லும் என்ஜினியரிங் கவுன்சிலிங்..பொறுப்பை தட்டி கழிக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம்

Google Oneindia Tamil News

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடத்தும் பொறுப்பை, தனியார் வசம் ஒப்படைக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல் கல்வியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைகழகம் நடத்தி வந்த பொறியியல் மாணவர் சேர்க்கை பொறுப்பு, பல்வேறு குளறுபடிகளால் நடப்பாண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திடம் சென்றுள்ளது.

Engineering Counseling go to private sector..Educators Anxiety

கடந்த வாரம் முதல் துவங்கிய கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு மே 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஜூன் 20-ம் தேதி முதல் கவுன்சிலிங் துவங்க உள்ள நிலையில், ஒற்றைசாளர முறையில் கவுன்சிலிங் நடத்த போதுமான வசதிகள் இல்லை என கூறி மாணவர் சேர்க்கை பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க தொழில்நுட்ப கல்வி இயக்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பணி தனியார் நிறுவனத்திடம் சென்றால் ஒரு இயந்திரதனமான வேலையாக தான் இது நடக்கும். குறித்த தேதியில் துவக்கி குறித்த தேதியில் முடிப்பது மட்டுமே தனியார் நிறுவனத்தின் இலக்காக இருக்கும். மாணவர்கள் நலனில் அக்கறை இருக்காது.

பாரதி எதுக்கு கண்ணம்மா அப்பாகிட்ட பேசறான்.. அம்மா பார்த்துட்டாங்களே..! பாரதி எதுக்கு கண்ணம்மா அப்பாகிட்ட பேசறான்.. அம்மா பார்த்துட்டாங்களே..!

மாணவர் சேர்க்கை பொறுப்பை தனியார் சேவையாக செய்ய மாட்டார்கள். மாணவர்களின் மனநிலையும் அவர்களுக்கு புரியாது, பெற்றோர்களின் நிலையும் தனியாருக்கு புரியாது. ஆக இது ஒரு நடத்தி முடிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற சம்பிரதாய ரீதியில் தான் நடக்குமே ஒழிய, சேவை நோக்கில் நடக்க போவது இல்லை என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைகழகம் கைவிட்டதே மிகப்பெரிய தவறு என கூறியுள்ள கல்வியாளர்கள், இந்த நிலையில் தொழில் நுட்ப கல்வி இயக்கமும் தனியாரிடம் கவுன்சிலிங் பொறுப்பை ஒப்படைக்க நினைப்பது மாணவர்கள் நலனை முற்றிலுமாக கைகழுவும் செயல் என கடுமையாக சாடியுள்ளனர்.

English summary
Responsibility of conducting online counseling for engineering student enrollment is to be handed over to private.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X