சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20 பெண்கள்.. மொத்தம் 30 தடவை நல்லா பார்த்தேன்.. அப்புறம்தான் இறங்கினேன்.. பதற வைத்த ஆவடி சர்மா!

சென்னையில் திருமண மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு படத்தை 30 முறை பார்த்துவிட்டு தான் அந்த காரியத்தில் இறங்கினாராம்.. 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியும் இருக்கிறாராம் இளைஞர் ஒருவர்!

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் ராகேஷ் ஷர்மா.. 36 வயதாகிறது.. இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார்.. கல்யாண வரன் மூலம் ஒரு பெண் அறிமுகமாகி உள்ளார்.

 engineering graduate arrested for marriage scam in chennai

அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஐந்தரை லட்சம் ரூபாய் பணம், 20 சவரன் நகைகளை அவரிடமிருந்து லவட்டி கொண்டதாக தெரிகிறது. நாளடைவில் ராகேஷின் நடத்தையில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் வந்தது.

அதனால் தன் தந்தையிடம் இதை பற்றி சொன்னார். உடனே அவரும் கொடுங்கையூர் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராகேஷ் பற்றின விசாரணையில் இறங்கினர். அந்த சமயத்தில்தான் ராகேஷ் அப்பெண்ணுக்கு திரும்பவும் போன் செய்து, 2 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார்.

நடிகை விஜயலட்சுமி திடீர் தற்கொலை முயற்சி.. விரைந்து சென்று மீட்ட போலீஸ்.. மருத்துவமனையில் அனுமதிநடிகை விஜயலட்சுமி திடீர் தற்கொலை முயற்சி.. விரைந்து சென்று மீட்ட போலீஸ்.. மருத்துவமனையில் அனுமதி

உஷாரான போலீசார், மாதவரம் ரவுண்டானா பக்கம் வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு பெண்ணிடம் அறிவுறுத்தினர்.. அதன்படியே அப்பெண், ராகேஷிடம் சொல்ல.. குறிப்பிட்ட இடத்துக்கு அவரும் வந்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் பணம் வாங்க வந்த ராகேஷை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.. விசாரணையில், இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது என்பதும் மனைவியை பிரிந்து வாழ்கிறார் என்பதும் தெரியவந்தது.

கத்தாரில் வேலை பார்த்து வந்துள்ளார்.. அப்போதுதான் "நான் அவனில்லை" படத்தை 30 முறை விடாமல் தொடர்ந்து பார்த்திருக்கிறார்.. அப்போதுதான் திருமண மோசடி செய்தால், நிறைய சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.. அதன்படியே திருமண மையங்களில் தொடர்பு கொண்டு, பெண் தேடி வந்துள்ளார்... யாரெல்லாம் தன் வலையில் விழுகிறார்களோ, அவர்களிடம் "நான் அவனில்லை" பட பாணியில் பணம், நகைகளை பறித்திருக்கிறார்.

இப்படியே 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உள்ளார்... அவர்களிடம் பொய், பொய்யாக சொல்லி பல லட்சம் ரூபாய் நகை மோசடியும் செய்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே ராகேஷால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தர முன்வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.

English summary
engineering graduate arrested for marriage scam in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X