சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூரப்பாவின் விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால்... நடவடிக்கைக்கு பரிந்துரை.. விசாரணை ஆணையம் அதிரடி..!

Google Oneindia Tamil News

சென்னை: முறைகேடுகள் தொடர்பான புகார்களில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என விசாரணை ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் வரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. பணி நியமன விவகாரத்தில் முறைகேடு நிகழ்த்தியதாக சூரப்பா மீது எழுந்த புகாரை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

Enquiry commission says, If Surappa explanation is not satisfactory, we will recommend action

இதையடுத்து அந்த ஆணையத்தில் இடம்பெற்ற 7 பேரும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், புகார் கொடுத்தவர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

விசாரணையின் போது அவர்கள் முன் வைத்த புகார்களுக்கு விளக்கம் கோரி சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விளக்க நோட்டீஸ்க்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்: சீனியர்கள், புதுமுகங்களுடன் 43 பேர் கொண்ட மமதா பானர்ஜி அமைச்சரவை இன்று பதவியேற்பு மேற்கு வங்கம்: சீனியர்கள், புதுமுகங்களுடன் 43 பேர் கொண்ட மமதா பானர்ஜி அமைச்சரவை இன்று பதவியேற்பு

இதனிடையே சூரப்பா விசாரணை ஆணையத்தின் நோட்டீஸ்க்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சூரப்பாவின் பதிலை பொறுத்து அவர் மீதான விசாரணை அடுத்தக் கட்டத்துக்கு செல்லவுள்ளது.

சூரப்பாவின் பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவும் விசாரணை ஆணையத்தினர் திட்டமிட்டுள்ளனர். ஆட்சி மாறிய நிலையில் சூரப்பா மீதான விசாரணையும் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Enquiry commission says, If Surappa explanation is not satisfactory, we will recommend action
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X