சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு... டெல்லி புறப்பட்டார் அமித் ஷா

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

Recommended Video

    சென்னை: நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை: இழுபறியில் அதிமுக, பாஜக தொகுதி ஒதுக்கீடு!

    தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

    பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக தனது கூட்டணியை அமைத்துள்ளது. அதேபோல திமுகவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    ஸ்டாலின் சிந்தனை உதயநிதியை முதல்வராக்குவது.. திமுக-காங் கூட்டணி என்பது குடும்ப ஆட்சி..அமித்ஷா தாக்குஸ்டாலின் சிந்தனை உதயநிதியை முதல்வராக்குவது.. திமுக-காங் கூட்டணி என்பது குடும்ப ஆட்சி..அமித்ஷா தாக்கு

    மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில், அமித் ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை தற்போது நிறைவடைந்துள்ளது.

    EPS and OPS are meeting Amit Shah tonight to discuss seat sharing

    அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் இணை அமைச்சர் கிசான் ரெட்டி, சி.டி. ரவி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    EPS and OPS are meeting Amit Shah tonight to discuss seat sharing

    அதேபோல அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். பேச்சுவார்த்தை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அமித் ஷா டெல்லி புறப்பட்டார்.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy and Deputy Chief Minister O Panneerselvam meeting Home Minister Amit Shah to discuss about seat sharing
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X