சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என்று முழங்கிய நேதாஜி... இபிஎஸ், ஓபிஎஸ் புகழாஞ்சலி

வங்கத்து சிங்கம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதுரை மாநாட்டில் பேசும் போது, நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என முழங்கினார். அவருடைய 125வது பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த நாளில் முதல்வர், துணை முதல்வரும் தங்களில்

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய விடுதலை போரில் தனது தீரம் மிக்க பேச்சாலும் செயலாலும் பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய திருமகனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்று முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தில் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து விடுதலைக்காக போராடிய அவர்தம் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என்று துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் 'பராக்கிரம திவாஸ்' என்று அறிவித்து மத்திய அரசு கொண்டாடி வருகிறது.

EPS and OPS Tributes Nethaji Subash Chandrabose 125 birthday

தேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் வீரரின் பிறந்தநாளை நாட்டு மக்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்து புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது
ட்விட்டர் பக்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்திய விடுதலை போரில் தனது தீரம் மிக்க பேச்சாலும் செயலாலும் பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய திருமகனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்!

ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..!

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவர் நேதாஜி. இரண்டாம் உலகப் போரின் போது இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அதை தலைமையேற்றி நடத்தி காட்டிய சாகசக்காரர். வங்காளத்தை சேர்ந்த சிங்கம், 1939 மதுரை மாநாட்டில் பேசும் போது, நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என முழங்கியது இன்றளவும் சிலிர்ப்பூட்டும் வாக்கியமாகவே உள்ளது.

நேதாஜியின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விடுதலை போரில் தனது தீரம் மிக்க பேச்சாலும் செயலாலும் பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய திருமகனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்! என்று பதிவிட்டுள்ளார்.

நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன்" என்று முழங்கிய விடுதலைவீரர் வங்கத்துச்சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்ததினத்தில், வீரமிக்க இளையசமுதாயத்தை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து விடுதலைக்காக போராடிய அவர்தம் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.

English summary
The Lion of Bengal, Netaji Subhash Chandra Bose, while speaking at the Madurai Conference, knelt that if I am born again I will be born a Tamil. On this day, which marks his 125th birthday, the Chief Minister and the Deputy Chief Minister have paid tribute to each other on their Twitter pages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X