India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்டியலை தூக்கிப் போட்ட எடப்பாடி! திடுக்கிட்டுப் போன ஓபிஎஸ்! இத்தனை சமாச்சாரம் இருக்கா? சரி தான் போல!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வரும் நிலையில் அவர் ஒருங்கிணைப்பாளரே இல்லை என ஓபிஎஸ்-க்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளதோடு, அவரது ஆதரவு வட்டம் குறித்த பட்டியலை தயாரித்து அவர்களை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக தகவலை நிர்வாகிகள் மத்தியில் கசியவிட்டுள்ளதால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாடலை என்ன நினைத்து அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் பாடினாரோ தெரியாது தற்போது அதிமுக தொண்டர்களின் நிலை இந்த பாடலைப் போலவே தான் இருக்கிறது என்றால் அது பொய்யாகாது. அந்த அளவுக்கு கட்சியில் ஒவ்வொரு நொடியும் என்ன நடக்கும் என பரபரப்புடன் காத்திருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

லாப நஷ்ட கணக்கா? ஜெ.வீடு.. மறுக்கும் எடப்பாடி.. இதெல்லாம் அசிங்கம் - குமுறும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! லாப நஷ்ட கணக்கா? ஜெ.வீடு.. மறுக்கும் எடப்பாடி.. இதெல்லாம் அசிங்கம் - குமுறும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

அதிமுகவின் மிக முக்கிய முழக்கமான திமுக எதிர்ப்பு என்ற கொள்கையே இரட்டை தலைமையால் மங்கி விட்டதாகவும், ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கட்சியில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்க தற்போது ஓபிஎஸ்ஸையே கட்சியை விட்டு விரட்டும் அளவுக்கு வந்திருக்கிறது.

 பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

கடந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனது சொந்த கட்சி பொதுக்குழு நிர்வாகிகளாலேயே மிகவும் அவமானப்படுத்தப்பட்டார் ஓபிஎஸ். இதையடுத்து பொதுக்குழுவில் இருந்து இருந்து அவர் ஆவேசத்துடன் வெளியேறிய நிலையில் ஜூலை பதினொன்றாம் தேதி அடுத்த அதிமுக பொதுக்குழு நடத்தப்படும் என தெரிகிறது. அதனை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மிக தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வரும் நிலையில் என்ன நடந்தாலும் நடத்திய தீர்வும் என எடப்பாடி தரப்பு கங்கணம் கட்டி நிற்கிறது.

அதிமுக தொண்டர்கள்

அதிமுக தொண்டர்கள்

இந்நிலையில் தான் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்ட போது ஓபிஎஸ் கையெழுத்திட்டு அனுப்புவதாக கடிதம் எழுதினார். அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காத எடப்பாடி பழனிச்சாமி செய்ய வேண்டியது எல்லாம் செய்துவிட்டு இப்போது என்ன என கேட்பது போல பதில் கடிதம் எழுதினார். கடந்த நாட்களில் நிர்வாகிகள் மூலமே ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்து வந்த எடப்பாடி பழனிச்சாமி நேற்று நேரடியாகவே களமிறங்கினார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் கழக ஒருங்கிணைப்பாளரே இல்லை என நேரடியாக அவரை கூறிவிட்ட நிலையில், தானும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் வகையில் இன்று ட்விட்டர் பக்கத்தில் தலைமைச் செயலாளர் என மாற்றிக்கொண்டார்.

நிர்வாகிகள் பட்டியல்

நிர்வாகிகள் பட்டியல்

இந்நிலையில் தான் ஓபிஎஸ் செய்யும் அவரது ஆதரவு நிர்வாகிகள் குறித்த பட்டியலையும் தயார் செய்துள்ள எடப்பாடி தரப்பு தங்கள் ஆதரவு நிர்வாகிகள் பட்டியலையும் கையில் தயாராக வைத்துள்ளது. மேலும் எடப்பாடிக்கு எதிராக எந்தெந்த மாவட்டங்களில் யார் யார் எதிராக செயல்பட்டு போஸ்டர்கள் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தினார்கள் என்ற பட்டியலும் அவரது கைக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து வரும் பொது குழுவில் அவர்கள் அனைவரையுமே கட்சியை விட்டு நீக்கும் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகளையே தகவல்கள் கசிந்துள்ளது.

  OPS-க்கு பதில் கடிதம் எழுதிய EPS... திமிறி எழும் 5 சந்தேகங்கள் *Politics
  ஓபிஎஸ் அதிர்ச்சி

  ஓபிஎஸ் அதிர்ச்சி

  ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் சாயலாமா என யோசித்து வரும் நிலையில் இந்த தகவலால் நிலைகுலைந்து போய் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்த பொதுக்குழுக்கள் எப்படியாவது எடப்பாடி தரப்பை சமாதானம் செய்து அவர்களுடன் ஐக்கியமாகிவிடலாம் என நினைத்து வருகின்றனர். இதற்காக பேச்சுவார்த்தை படலங்களும் தூது படலங்களும் நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் தகவல் ஓபிஎஸ்க்கு கிடைத்திருக்கிறது. இதனால் கலக்கத்தில் உள்ள அவர் என்ன செய்வது என்று யோசித்து வருகிறார் அதே நேரத்தில் என்ன நடந்தாலும் விட்டுவிடக்கூடாது தேர்தல் ஆணையம் நீதிமன்றம் என அடுத்தடுத்து அஸ்திரங்களை எடுத்து எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி தர வேண்டும் எனவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  English summary
  With Edappadi Palanisamy's hand in the AIADMK's single leadership affair, he has retaliated directly to the OBS, claiming that he was not a co - ordinator, and that the OPS was shocked to learn that a list of his circle of supporters had been prepared and information leaked to executives that he would be expelled from the party.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X