• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"அவங்க" திமுக பக்கம் வர போகிறார்களாமே.. சறுக்கி விழும் அதிமுக.. திமிறி எழும் பாஜக..!

Google Oneindia Tamil News

சென்னை: மாநில, மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பு இல்லாததால், ஈரோடு அதிமுகவினர் திமுகவுக்கு தாவி வந்து கொண்டிருக்கும் சூழல் உருவாகி உள்ளது.

அதிமுக கோட்டை என்றாலே அது கொங்குதான்.. அதிலும் ஈரோடுதான் டாப்.. எம்ஜிஆர் காலத்தில் இருந்து இப்போதுவரை ஈரோடு அதிமுக மிகமுக்கியத்துவமான இடத்தில் உள்ளது.

மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல் மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்

ஜெயலலிதா தன்னுடைய ஆட்சி காலத்தில் ஈரோட்டை தனி சிறப்புடன் வைத்திருந்தார்.. இந்த மாவட்டத்துக்கான உரிய பிரதிநிதித்துவத்தை மறக்காமல் தந்து வந்தார்

 திமுக கொடி

திமுக கொடி

அதற்கேற்றபடி 5 முக்கிய அமைச்சர்களான ஈரோடு - முத்துசாமி, கோபி - செங்கோட்டையன், தாராபுரம் - ஈஸ்வரமூர்த்தி, வெள்ளக்கோவில் - துரை ராமசாமி, காங்கேயம் - வீரப்பன் போன்றோர் அசைக்க முடியாத ஆளுமைகளாக வலம் வந்தனர். இந்த 5 அமைச்சர்களும் அன்று போட்ட விதை, இன்றுவரை உறுதியாக உள்ளது.. அதனால்தான், கொங்குவில் இன்றுவரை திமுகவால் கொடி நாட்ட முடியாமல் திணறி வருகிறது..

 4 தொகுதிகள்

4 தொகுதிகள்

ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம் ஆகிய 4 தொகுதிகளில், திமுகவும், அதிமுகவும்தான் எப்போதுமே நேரடியாக மோதும்.. இங்கு, கொங்கு வேளாளர், முதலியார், வன்னியர் சமூகங்களின் வாக்குகள் பரவலாக உள்ளன... இவர்களை முன்வைத்துதான் இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்களும் முன்னிறுத்தப்படுவார்கள்.. அதற்கேற்றபடி வெற்றிவாகையும் சூடுவார்கள்.

 சோர்வு

சோர்வு

ஆனாலும், ஈரோடு மாவட்ட அதிமுகவானது முன்பு போல இல்லை என்றே சொல்லப்படுகிறது.. குறிப்பாக ஜெ. மறைவுக்கு பிறகு, மாவட்ட செயலாளர் ராமலிங்கத்துக்கும், புறநகர் மாவட்ட செயலர் கருப்பணனுக்கும் இடையே இணக்கம் இல்லாமல் போய்விட்டது.. இதுதான் முதல் சோர்வாகி விட்டது.

 முத்துசாமி

முத்துசாமி

அதுமட்டுமல்ல, செங்கோட்டையன், கருப்பணன், ராமலிங்கம் இவர்களை தவிர பெரிய அளவில் வேறு யாருமே அங்கு தலைநிமிர முடியவில்லை.. முத்துசாமியும் திமுக பக்கம் ஏற்கனவே போய் இப்போது அமைச்சராகியும் விட்டார். வேறு யாரும் இந்த தொகுதியில் வளரவும் இல்லை.. இது அங்குள்ள அதிமுக பிரமுகர்களுக்கு இன்னொரு சோர்வை தந்துவிட்டதாக தெரிகிறது. இனி அடுத்தடுத்து தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், வலுவான அதிமுக ஈரோடு மாவட்டத்தில் இல்லாதது, மேலும் சறுக்கலை தந்துவிடும் என்றே கணிக்கப்படுகிறது.

 சட்டப்பேரவை

சட்டப்பேரவை

தற்போதிருக்கும் அதிமுக எம்எல்ஏக்களோ, திமுகவை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில்கூட, திமுகவை எதிர்த்து பாஜக கேட்ட கேள்வியைகூட அதிமுக எம்எல்ஏக்கள் அவ்வளவாக கேட்கவில்லை.. குறிப்பாக அதிமுகவினர் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படவில்லை என்பதே மிகப்பெரிய குறையாக எழுந்துள்ளது.

திமுக

திமுக

இதன்காரணமாக 2 விதமான விளைவுகள் ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட ஆரம்பித்துள்ளன.. ஒன்று, அதிருப்தியில் உள்ளவர்கள் திமுக பக்கம் தாவி வருகிறார்கள்.. தோப்பு வெங்கடாசலம் ஏற்கனவே திமுகவுக்கு வந்துவிட்டார்.. இன்னும் பல ஈரோடு மாவட்ட அதிருப்தி அதிமுகவினர் திமுகவில் இணைய போவதாக சொல்லி வருகிறார்கள்..

 கட்சி தாவல்

கட்சி தாவல்

மற்றொரு பக்கம், பாஜக அங்கு தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.. அதிமுக செய்யக்கூடிய மற்றும் செய்ய வேண்டிய வேலையை பாஜக கையில் எடுத்துள்ளது.. முக்கிய பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவும் ஆரம்பித்துள்ளது.. மொடக்குறிச்சி, பாஜக எம்எல்ஏவை முன்னிலைப்படுத்தி மனுக்களை வழங்கியும், பரிந்துரைகளை பெற்றும் வருவதே இதற்கு சாட்சியாகும். அதேபோல, பாஜகவே முன்னிலைப்படுத்தப்படும் என்ற எண்ணமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

 தேர்தல்கள்

தேர்தல்கள்


அதாவது அதிமுக தன்னுடைய வலுவை இங்கு இழந்து வருவதால், ஒருபக்கம் திமுகவும், மறுபக்கம் பாஜகவும் களத்தில் குதித்துள்ளன.இப்படியே போனால், இனி வரும் தேர்தல்களில் பாஜக Vs திமுக என்ற நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அதிமுக சுதாரிக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

English summary
Erode ADMK executives may join in the DMK soon, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X