சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

களம் இறங்கிய காங்கிரஸ்..ஆதரவா? எதிர்த்து போட்டியா? மநீம நிர்வாகிகளுடன் இன்று கமல் இறுதி ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் களம் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பெரும் படையையே தேர்தல் பணிக்குழுவாக அறிவித்துள்ளது.

Erode East by Election: MNM President Kamal Haasan to announce party Stand today?

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் அதிமுக இபிஎஸ் கோஷ்டி உறுதியாக உள்ளது. ஆனால் ஓபிஎஸ் அணியோ, நாங்கள் போட்டியிடுவோம் அல்லது பாஜக வேட்பாளரை ஆதரிக்க தயார் என கூறியிருக்கிறது. மேலும் இபிஎஸ் கோஷ்டி அதிமுக தலைவர்கள், தங்களது கூட்டணியில் இருக்கும் அத்தனை சிறு கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கின்றனர்.

இன்னொரு பக்கம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என தமிழக பாஜக தலைமை விரும்புகிறதாம். அதேநேரத்தில் இது விஷப்பரீட்சை வேண்டாத வேலை என சீனியர்கள் பலரும் கடுமையாக எதிர்க்கின்றனராம்.

Erode East by Election: MNM President Kamal Haasan to announce party Stand today?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும் வரும் 29-ந் தேதி ஈரோடு தொகுதியில் போட்டியிடக் கூடிய பெண் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளது பாமக. தேமுதிக எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்கமான ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன். டெல்லியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று காங்கிரஸை ஆதரித்து பேசினார் கமல்ஹாசன். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கமல்ஹாசன் களம் இறங்குவாரா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.

இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். இன்றைய ஆலோசனைக்குப் பின்னர், கமல்ஹாசன் திட்டவட்டமான இறுதி முடிவை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவனை ஸ்டிராங்காக திமுக பரிந்துரைக்க இதுதான் காரணம்!ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவனை ஸ்டிராங்காக திமுக பரிந்துரைக்க இதுதான் காரணம்!

English summary
Ahead of Erode East by Election, MNM President Kamal Haasan will announce his party Stand today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X