சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி.. யாருமே கைத்தட்டவில்லை.. ப சிதம்பரம் சொன்ன 3 விஷயம்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது, ஒரு சில இருக்கைகளில் மட்டுமே தலைவர்கள் அமர்ந்து இருந்ததாகவும், மற்ற இருக்கைகள் காலியாக இருந்தது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது யாருமே கைத்தட்டவில்லை என்றும் இது இன்னும் ஏமாற்றத்தை அதிகப்படுத்தியதாக கூறி உள்ளார் ப சிதம்பரம்.

பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..! பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!

பிரதமர் மோடி நான்கு அமெரிக்க பயணத்தை முடித்துகொண்டு இன்று நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க பயணத்தின் முதல் நாளில் அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களின் சிஇஒக்களை சந்தித்தார். இதேபோல் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்தார். இரண்டு நாட்டு உறவு குறித்தும் ஆசிய பிரச்சனைகள் குறித்தும் இருவரும் உரையாடினார்.

ஐநாவில் பேச்சு

ஐநாவில் பேச்சு

பயணத்தின் கடைசி நாளான நேற்று நியூயார்க்கில் ஐநா பொதுக்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசும் போது, பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம். இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் ஐ.நாவில் பேசுகிறேன். குஜராத் முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் கடந்த 20 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இப்போது 75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

ட்ரோன் மூலம் கண்காணிப்பு

ட்ரோன் மூலம் கண்காணிப்பு

வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கடைக்கோடி மக்களை சென்றடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது. இந்தியா சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது உலகம் முழுவதும் அதன் தாக்கம் ஏற்படுகிறது.ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது.

பகுத்தறிவு

பகுத்தறிவு

அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் ஜனநாயகத்தின் மூலம் சாத்தியமாகிறது. பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது. , முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனையை வளர்ச்சிக்கு அடிப்படையாக மாற்ற வேண்டும். அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை வலுப்படுத்தும் பொருட்டு, இந்தியா அனுபவம் சார்ந்த கற்றலை ஊக்குவிக்கிறது" என்று பேசினார்.

ப சிதம்பரம் தாக்கு

ப சிதம்பரம் தாக்கு

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது, ஒரு சில இருக்கைகளில் மட்டுமே தலைவர்கள் அமர்ந்து இருந்தாகவும், மற்ற இருக்கைகள் காலியாக இருந்தது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முட்டாள்தனம்

முட்டாள்தனம்

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது யாருமே கைத்தட்டவில்லை என்றும் இது இன்னும் ஏமாற்றத்தை அதிகப்படுத்தியதாக கூறி உள்ளார் ப சிதம்பரம். மேலும் ஐநா சபையில் நிரந்த உறுப்பினராகவும் இந்தியா முயன்று வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடு முட்டாள்தனமாக இருப்பதாகவும் பசிதம்பரம் சாடி உள்ளார்,.

நான்கு முறை

நான்கு முறை

இந்நிலையில் பிரதமர் மோடி ஐநாவில் பேசும் போது, யாரும் கைத்தட்டவில்லை என்ற குற்றச்சாட்டை நெட்டிசன்கள் மறுத்துள்ளனர். ஹரி என்பவர் வெளியிட்ட பதிவில், நான் பிரதமர் மோடியின் முழு உரையையும் கேட்டிருக்கிறேன். குறைந்தது நான்கு முறையாவது பாராட்டி கைத்தட்டப்பட்டது. எனவே உங்கள் ட்விட் பதிவு முற்றிலும் உண்மை இல்லாதவை என்று கூறினார்.

Recommended Video

    Modi US Visit | மோடியின் Boeing 777-க்கு Pakistan அனுமதி | Oneindia Tamil
    இந்திபேச்சு

    இந்திபேச்சு

    இதனிடையே இன்னொரு நெட்டிசன், தனது பதிவில் , மோடிஜியின் பேச்சு ஹிந்தியில் இருந்தது, சரியான நேரத்தில் மொழிபெயர்ப்பு விஷயங்கள் எப்படி அங்கிருந்த தலைவர்களுக்கு சென்றன என்பது எங்களுக்குத் தெரியாது, அது கூட கைதட்டல் இல்லாததற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

    அமெரிக்க அதிபர்

    அமெரிக்க அதிபர்

    எனினும் பிரதமர் மோடியின் இந்த அமெரிக்க பயணம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. முக்கியமாக அவரின் ஐநா உரை பெரிய அளவில் கவனம் பெற்றது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெற்றி, ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம், பாகிஸ்தானுக்கு சீனா ரஷ்யா வழங்கும் ஆதரவிற்கு இடையில் இந்திய பிரதமர் மோடியின் இந்த பயணம் அதிக கவனம் பெற்றது. அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் தேசிய அளவில் கவனம் பெற்றது. ஆனால் அமெரிக்காவில் இவரின் பயணம் அதிகம் கவனிக்கப்படவில்லை என்று சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் பைடன் வழியனுப்ப வரவில்லை என்றும், கமலா ஹாரிசும் பெரிய முக்கியத்துவத்தை மோடிக்கு கொடுக்கவில்லை என்றும் புகார் உள்ளது. அமெரிக்க ஊடகங்கள் கூட பிரதமர் மோடி சந்திப்பை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்க ஊடகங்கள் புறக்கணித்துவிட்டதாக புகார் உள்ளது,.

    English summary
    p chidambaram said I was disappointed that only a few seats were occupied when PM Modi addressed the U N General Assembly. And even more disappointed that no one applauded. INDIA’s Permanent Mission at the UN has goofed up massively.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X