சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

EVKS Elangovan: அதைவிடுங்க.. பெரியாரின் பேரன் எங்கே.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒன்னுமே சொல்லாமல் இருக்காரே

ஈவிகேஎஸ் கருத்து சொல்லாமல் உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பெரியார் குறித்த கருத்துக்களுக்கு எல்லோரும் எதிர்பார்த்தது, பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஏதாவது கருத்து கூறுவாரா என்றுதான். ஆனால் இன்று வரை இளங்கோவன் அதுகுறித்து எதுவுமே பேசாமல் உள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். பெரியாரின் பேரன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். தேர்ந்த ஞானம் கொண்டவரும் கூட... ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் , இல்லாதபோதும் அவரை துணிந்து விமர்சனம் செய்தவர்.

தந்தை பெரியார் குறித்த சர்ச்சைதான் இப்போது தமிழகத்தை வலம் வந்து கொண்டுள்ளது. சமீப காலமாகவே பெரியாரை வைத்துக் கொண்டுதான் அரசியல் செய்து வருகின்றனர். அந்த வகையில் மறைந்த பிறகும் கூட பெரியார் பிசியாகவே உள்ளார் என்பது சந்தோஷமான விஷயம்தான்.

ஸ்டாலினே! ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக்கோங்க.. ரைட்ல வச்சிக்கோங்க.. ஆனா ஸ்ட்ரைட்டா மட்டும் நோ.. கராத்தேஸ்டாலினே! ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக்கோங்க.. ரைட்ல வச்சிக்கோங்க.. ஆனா ஸ்ட்ரைட்டா மட்டும் நோ.. கராத்தே

வாதப்பொருள்

வாதப்பொருள்

ரஜினிகாந்த் பெரியார் குறித்து கூறிய தகவல்கள் பெரும் சர்ச்சையாகி விட்டன. அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இப்போது படு சூடாக உள்ளன. ஒவ்வொரு கட்சியும் ரஜினிகாந்த் குறித்த கருத்துக்கு எதிர்க் கருத்தை, ஆதரவுக் கருத்தை பதிவு செய்து வருகின்றன. போராட்டங்களும் கூட நடந்துள்ளன. மேலும் வழக்குகளும் கூட போடப்பட்டு வருகின்றன.

பெரியாரின் பேரன்

பெரியாரின் பேரன்

ஆனால் பெரியாரின் பேரனான ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன ஆனார் என்பதுதான் தெரியவில்லை. அவரிடமிருந்து இதுவரை ஒரு கருத்து கூட வெளியாகவில்லை. அவர் சமீப காலமாக ஆக்டிவாக இல்லை. குறிப்பாக தேனி மக்களவைத் தேர்தலில் அவர் அதிமுகவின் ரவீந்திரநாத்திடம் தோல்வியுற்ற பிறகு அமைதியாகி விட்டார். பெரிதாக எதையும் பேசுவதில்லை. எதிலும் ஆக்டிவாக ஈடுபடுவதும் இல்லை.

நிலைப்பாடு?

நிலைப்பாடு?

ஆனால் தற்போது பெரியார் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிலும் ரஜினி மூலமாக பெரியார் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையில் இளங்கோவன் நிலைப்பாடு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது. இருப்பினும் இளங்கோவன் அமைதி காத்து வருகிறார். இதுவரை அவர் எதையும் பேசவில்லை.

குஷ்பு

குஷ்பு

உண்மையில் இளங்கோவன் சார்ந்த காங்கிரஸ் கட்சியுமே கூட சாப்ட்டான போக்கைத்தான் ரஜினி விவகாரத்தில் கடைப்பிடித்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. திருநாவுக்கரசரும் கூட பெரிதாக பேசவில்லை. குஷ்பு கூட ரஜினிக்கு ஆதரவாகவே நான் இருக்கிறேன் என்று கூறி விட்டார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு எம்பி தொகுதியில் போட்டியிட தீவிரமாக முயன்றவர் என்பது நினைவிருக்கலாம்.

ரஜினி

ரஜினி

காரணம், பெரியார் பூமி என்பதாலும், தான் பெரியாரின் தீவிர ஆதரவாளர் என்பதாலும் அதில் போட்டியிட ஆசைப்பட்டார். ஆனால் கடைசியில் அவரே கூட ரஜினிக்கே ஆதரவு என்று சொல்லி விட்டார். அப்படி இருக்கும்போது ஈரோட்டு மண்ணுக்குச் சொந்தக்காரர், பெரியாரின் பேரன், குஷ்புவின் குரு என்றும் சொல்லப்படுபவர், இளங்கோவன் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

English summary
rajnikanth and periyar issue: evks elangovan keeps mum on rajinikanth in periyar issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X