சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படையெடுத்து நிற்கும் பலங்கள்.. சம்பந்தமே இல்லாமல் இறக்கி விடப்பட்ட இளங்கோவன்.. தடதடக்கும் தேனி

Google Oneindia Tamil News

Recommended Video

    Theni Lok sabha constituency: மும்முனை போட்டியில் தேனி தொகுதி- வீடியோ

    சென்னை: தேனி லோக்சபா தேர்தலில் ரவீந்திரநாத், தங்கதமிழ்ச் செல்வன் ஆகியோர் போட்டியிடுகையில் சம்பந்தமே இல்லாமல் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவனும் இங்கு இறக்கிவிடப்பட்டுள்ளார்.

    தேனி நாடாளுமன்றத் தொகுதியானது சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயகனூர், கம்பம் ஆகிய பசுமையான தொகுதிகளை உள்ளடக்கியது.

    இங்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார், அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் என மும்முனை போட்டி நிலவுகிறது.

    கிளி ஜோசியத்தை நம்பி அரசியல் செய்யவில்லை... ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொளேர் கிளி ஜோசியத்தை நம்பி அரசியல் செய்யவில்லை... ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொளேர்

    தினகரன்

    தினகரன்

    ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கடந்த சில ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார். 38 வயதாகும் அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். தேனியில் ஓபிஎஸ் மகனை தோற்கடிப்பதன் மூலம் ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கையில் சற்று தடுமாற்றம் ஏற்படுத்தவே தினகரன் தங்கதமிழ்ச் செல்வனை களம் இறக்கியுள்ளதாக தெரிகிறது.

    வியூகம்

    வியூகம்

    அது போல் தினகரன் எம்பியாக இருந்த போது இந்த தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். அதை நிச்சயம் அத்தொகுதி மக்கள் மறக்கமாட்டார்கள் என்பது தினகரனின் நம்பிக்கை. அது போல் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரனிடம் தோற்றது போல் தேனி மக்களவை தொகுதியில் தோற்கக் கூடாது என அதிமுக வியூகம் வகுத்துள்ளது.

    இருவேட்பாளர்கள்

    இருவேட்பாளர்கள்

    இதனால் ரவீந்திரநாத்தை ஜெயிக்க வைக்க அதிமுக கடுமையாக பாடுபட்டு வருகிறது. முதல் முறையாக போட்டியிடும் தனது மகனை ஜெயிக்க வைப்பதுதான் ஓபிஎஸ்ஸுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்த இரு வேட்பாளர்களும் தேனி மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர்கள்.

    சமூக வாக்குகள்

    சமூக வாக்குகள்

    ஆனால் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இந்த தொகுதி சம்பந்தமில்லாத தொகுதியாகும். இவர் இத்தொகுதிக்கு அறிமுகமில்லாதவர். வெறும் திமுக, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை நம்பியே இவர் களம் இறங்கியுள்ளார். மேலும் இந்த தொகுதி கம்பம் சட்டசபை தேர்தலுக்குள்பட்டது என்பதால் கவுடா சமூகத்துக்கு வாக்குகளும் இவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    தேனி தொகுதியை பொருத்த வரையில் அத்தொகுதியில் வெற்றி பெற தங்கதமிழ்ச் செல்வன், தினகரன் ஆகியோர் வியூகம் வகுத்துள்ளனர். மேலும் தினகரனுக்கு சளைக்காமல் ஓபிஎஸ்ஸும் வியூகம் வகுத்துள்ளார். தினகரனின் பணப்பலம்+ ஆள்பலம், ஓபிஎஸ்ஸின் பணப்பலம் + அதிகார பலம் ஆகியவற்றை தாண்டி ஈவிகேஎஸ் இளங்கோவன் 2-ஆம் இடம் பெற்றாலே அது பெரிய விஷயம் என கூறப்படுகிறது. எனவே தேனி தொகுதியை பொருத்தமட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்வை காங்கிரஸ் யோசித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    English summary
    EVKS Elangovan is going to contest in Theni Lok sabha constituency. Let us wait and watch whether he will win or lose?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X