சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்?.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா மீது இல்லாத காதல் ஓபிஎஸ் மீது மட்டும் ஏன் என பிரதமர் மோடிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்கதமிழ் செல்வனும் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும் போட்டியிட்டனர். இதில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 50 ஆயிரம் வாக்குகளை பெற்று ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த தோல்வி குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.

தேமுதிகவின் எதிர்காலம் என்னாகும்?... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள் தேமுதிகவின் எதிர்காலம் என்னாகும்?... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்

உழைத்த கட்சி

உழைத்த கட்சி

அப்போது அவர் கூறுகையில் என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி; அதிகாரம் மற்றும் பண பலத்தால் தோற்கடிக்கப்பட்டேன். வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கும், உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றிகள்.

முறைகேடுகள்

முறைகேடுகள்

பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு கீழே விழுந்துவிட்டதாக கூறினர். தேனி மக்களவை தொகுதியில் தில்லுமுல்லுகள், முறைகேடுகள் நடந்துள்ளன.

அடுத்த கட்ட நடவடிக்கை

அடுத்த கட்ட நடவடிக்கை

தேனி மாவட்டத்தில் விவிபேட் வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும். வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

மோடிக்கு கேள்வி

மோடிக்கு கேள்வி

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஜெயிக்க மோடி உதவியுள்ளார். பாஜகவை சேர்ந்த தமிழிசை, எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது இல்லாத காதல் மோடிக்கு ஓபிஎஸ் மீது மட்டும் இருப்பது ஏன் என தெரியவில்லை என்றார் இளங்கோவன்.

English summary
Theni Congress candidate EVKS Ilangovan asks why Modi has so much affection on OPS rather than BJP candidates Tamilisai, H .Raja, Pon RadhaKrishnan?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X