சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுத்ததெல்லாம் என்னாச்சு.. ஏமிரா சீட்டிங்கா.. ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி செம டென்ஷன்!

ஆதரவாளர்களை நம்பி ஏமாந்து உள்ளாராம் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமதி. ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரிப்பு- வீடியோ

    சென்னை: எல்லாரும் சேர்ந்து பாலகிருஷ்ண ரெட்டியை ஏமாத்திட்டாங்க போல இருக்கு.. யாரையெல்லாம் அவர் அதிகமாக நம்பினாரோ அவர்களே எதிராக வேலை பார்த்திருக்கிறார்கள் என்று தெரிந்து ரெட்டி ரொம்பவே சூடாகி விட்டாராம்!

    அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணரெட்டி, ஒரு கலவர வழக்கில் சிறை தண்டனை பெற்றவர். அதனால், அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் நிலைமை ஏற்பட்டது.

    இதை ரெட்டி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், வழக்கு 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. அதுகூட பஸ் மீது கல் வீசியது தொடர்பான வழக்கு!

    ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள் பழனிச்சாமி - பன்னீர்செல்வம்... டிடிவி.தினகரன் பேச்சுஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள் பழனிச்சாமி - பன்னீர்செல்வம்... டிடிவி.தினகரன் பேச்சு

    மனைவி ஜோதி

    மனைவி ஜோதி

    இன்னும் இரண்டரை வருஷ ஆட்சி கையில் உள்ள நிலையில், பதவியை விட்டு விலகவே ரெட்டிக்கு மனசில்லை. அதனால், எப்படியும் ஓசூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்போது, அங்கே தனக்கு பதில் தன் மனைவி ஜோதிக்கு சீட் தர வேண்டும் என்றும், அப்படி ஜோதி ஒசூரில் ஜெயித்து விட்டால், தான் வகித்து வந்த விளையாட்டு துறை அமைச்சர் பதவியை அவருக்கு தர வேண்டும் என்றும் அதிமுக தலைமையிடமே நேரடியாக பேசி சம்மதமும் வாங்கிவிட்டார் என்றும் ஒரு தகவல் வெளியானது.

    சுறுசுறுப்பு

    சுறுசுறுப்பு

    இதே தொகுதியில் போட்டியிட அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிறைய ஆர்வம் காட்டினாலும், ரெட்டியின் டீலுக்கு அதிமுக ஓகே சொன்னது. இதையடுத்து மனைவியை ஜெயிக்க வைக்க படு சுறுசுறுப்பாக இறங்கினார் ரெட்டி. அதற்கேற்றபடி ஜோதி ஒன்றும் சாதாரண நபர் இல்லை. பொது வாழ்வில் அனுபவம் வாய்ந்தவர். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஓசூர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருந்திருக்கிறார்.

    பட்டுவாடா

    பட்டுவாடா

    இருந்தாலும் விட்டதை பிடிக்க, தொகுதி மக்களிடம் தாராளத்தை காட்ட முடிவு செய்தார். அதன்படி
    தொகுதிக்குள் "சிலபல" விஷயங்களில் உள்ளே இறங்கினார். இதற்காக கூட்டுறவு தலைவர், முதல், ஒன்றியம், கிளை என அடிமட்டம் வரை உள்ள நிர்வாகிகளை நம்பி பட்டுவாடா பொறுப்பை கொடுத்தார்.

    விரட்டி பிடிக்கிறார்

    விரட்டி பிடிக்கிறார்

    ஆனால் தேர்தல் முடிந்து இத்தனை நாள் கழித்துதான், ரெட்டி தந்தது யாரிடமும் போய் சரியாக சென்றடையவில்லை என்று தெரிந்தது. நம்பி கொடுக்கப்பட்டதை ஆட்டைய போட்டுவிட்டார்கள் என்ற விஷயமும் தெரிந்து இடிந்து போய்விட்டாராம். அதனால் மோசம் செய்தவர்களை விரட்டி பிடித்து கொடுத்ததை திரும்ப கேட்டு வருகிறாராம்.

    பீதி

    பீதி

    இழந்தது ஒரு பக்கம் இருந்தாலும், பதவி என்னாவது? மனைவி வெற்றி பெறாவிட்டால் தலைமையிடம் என்ன சொல்வது? நம்பி உறுதி தந்தார்களே.. ஒசூர் தொகுதி ரிசல்ட் எப்படி இருக்குமோ என்றெல்லாம் ரெட்டியை பீதி சூழ்ந்துள்ளதாம்!

    English summary
    Ex Minister Bala Krishna Reddy's disappointment over supporters in Hosur Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X