சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட்கா விற்க லஞ்சம், கொரோனா உபகரண முறைகேடு.. இப்போது சொத்து குவிப்பு.. வசமாக சிக்கிய விஜயபாஸ்கர்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரம், கொரோனா காலத்தில் உபகரணங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு என வசமாக சிக்கியுள்ளார் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை மிக இழிவாக விமர்சனம் செய்தார் என்பதற்காகவே விஜயபாஸ்கருக்கு 2013-ல் அமைச்சர் பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா. 2011-ல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே குவாரி தொழில், கல்வி நிறுவனங்கள் என சகலத்திலும் கால் பதித்துவிட்டார் விஜயபாஸ்கர்.

இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

2016 சட்டசபை தேர்தலில் அதிமுக வென்ற போது சுகாதாரத்துறை அமைச்சரானார் விஜயபாஸ்கர். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களும் அங்கேயே முகாமிட்டு சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக, சசிகலா தரப்பின் ஆகப் பெரும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் விஜயபாஸ்கர்.

சசிகலா தரப்பில் செல்வாக்கு

சசிகலா தரப்பில் செல்வாக்கு

தாம் உட்பட மூத்த அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்த்துவிடக் கூடாது என விஜயபாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் தடுத்தனர் என தர்மயுத்தம் நடத்திய காலத்தில் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவே கட்சி, ஆட்சி பொறுப்பேற்க வேண்டும் என குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் விஜயபாஸ்கர். அதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. அதுவே வில்லங்கமாகவும் விஸ்வரூபம் எடுத்தது.

Recommended Video

    விஜயபாஸ்கரின் மலைக்க வைக்கும் சொத்துகள்… லஞ்ச ஒழிப்புத்துறையின் FIR பட்டியல்!
    குட்கா விற்க லஞ்சம்

    குட்கா விற்க லஞ்சம்

    தமிழகத்தில் குட்கா போதைப் பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் சட்டவிரோதமாக குட்கா விற்பனை தொடர்ந்து நடைபெற்றது. 2016-ல் எம்.டி.எம். குட்கா தயாரிப்பாளர் மாதராவ் வீடு, குடோன்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலருக்கு லஞ்சம் கொடுத்ததற்கான டைரி சிக்கியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவும் வழக்கு தொடர்ந்தது.

    ஜெ.வீட்டில் சிக்கிய கடிதம்

    ஜெ.வீட்டில் சிக்கிய கடிதம்

    அப்போது வருமான வரித்துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரம் நாட்டையே அதிர வைத்தது. அதில், ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் சோதனையிட்ட போது குட்கா விற்பனைக்கு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு முன்னாள் டிஜிபி அசோக்குமார் எழுதிய கடிதம் சிக்கியது. சசிகலாவின் அறையில் இந்த கடிதம் கிடைத்தது என வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இதன்பின்னர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அடுத்த பூதமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பணப்பட்டுவாடா ஆவணங்கள் சிக்கின. இதேபோல் பல முக்கிய ஆவணங்களை விஜயபாஸ்கரின் சென்னை வீட்டில் இருந்து ரெய்டு நடந்து கொண்டிருந்த போதே அவரது உதவியாளர்கள் எடுத்துக் கொண்டு சுவர் ஏறி தப்பி குதித்த சம்பவங்களும் நிகழ்ந்தன.

    கொரோனா கால முறைகேடு

    கொரோனா கால முறைகேடு

    சட்டசபை தேர்தலின் போது விஜயபாஸ்கர் மீதான குட்கா விற்பனைக்கு லஞ்சம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகிய விவகாரங்கள் திமுகவின் பிரசாரங்களில் முக்கிய இடம் பிடித்திருந்தது. சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சியை கைப்பற்றிய பின்னர், கொரோனா காலத்தில் சுகாதாரத்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

    லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

    விஜயபாஸ்கருக்கு சொந்தமான மொத்தம் 43 இடங்களில் இன்று இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக ரூ27.22 கோடி சொத்துகள் குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி என பல அமைச்சர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடைபெற்றன. அப்போது எல்லாம் எப்போது சி.விஜயபாஸ்கர் சிக்குவார் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. தற்போது விஜயபாஸ்கர் மற்றும் அவரது சொத்து குவிப்புக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் என அத்தனை பேரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கி இருக்கின்றனர்.

    English summary
    Here is details of Ex Minister C.Vijayabaskar's Gutkha scam to Disproportionate Assets case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X