• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆம்பளையா இருந்தா".. ஸ்டாலினுக்கு சவால் விட்டாரே "மஞ்ச சட்டைக்காரர்".. அவர் இப்போ சரண்டர்..!

|

சென்னை: "ஆம்பளையா இருந்தால் என் ஊருக்கு வந்து பாரு".. என்று முக ஸ்டாலினுக்கு அன்று சவால்விட்டாரே ராஜேந்திர பாலாஜி, அவர் இப்போது கப்சிப் ஆகிவிட்டார்.. அத்துடன் தடாலடியாக யூடர்ன் போட்டு முதல்வர் ஸ்டாலினை பாராட்டியும் உள்ளார்.

கடந்த முறை அதிமுக ஆட்சியில், திமுகவை அளவுக்கு அதிகமாக விமர்சித்தது ராஜேந்திர பாலாஜிதான்.. எடப்பாடி பழனிசாமிகூட, பிரச்சாரத்தில்தான் ஸ்டாலினை விமர்சித்தார்.. ஆனால், இந்த 4 வருடமாகவே, ஸ்டாலினை மட்டுமே குறி வைத்து பேசியவர் ராஜேந்திர பாலாஜி.

இவர் எப்போதெல்லாம் ஸ்டாலினை விமர்சிக்கிறாரோ, அந்த வீடியோக்கள் அத்தனையும் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டு வைரலாவதுண்டு.. அந்த வகையில் ஒருமுறை ராஜேந்திர பாலாஜி பேசியது எல்லை மீறிவிட்டது..

கலைஞர்

கலைஞர்

"உங்க வீட்டுக்கு புட்டபர்த்தி சாய்பாபா வந்தப்போ, உங்க அம்மா தயாளு அம்மாள் சாய்பாபாவிடம் திருநீர் வாங்கினாங்களே.. அப்படியே மடிப்பிச்சை போல் வாங்கினாங்களே.. அப்போ பக்கத்தில் கலைஞரும்தான் உட்கார்ந்திருந்தாரு... துரைமுருகன் அண்ணாச்சி கூட ஒரு மோதிரம் வாங்கிக்கிட்டாரே.. இப்போ என்ன பெரிய நாத்திகம் பேசுகிறீங்க...நாத்திகன் என்றால் கோயிலுக்கு போகாதே.. பள்ளிவாசல், சர்ச்சுக்கு போகாதே.. நீ நல்ல ஆம்பளையா இருந்தால் என் ஊருக்கு வா பார்ப்போம்" என்று மிகவும் கீழ்த்தரமாக, ஒருமையிலும் அன்று முக ஸ்டாலினை விமர்சித்திருந்தார் ராஜேந்திர பாலாஜி.

 தலைமை

தலைமை

ஆனால், இதற்கு திமுக தலைமை இதற்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.. ராஜேந்திர பாலாஜியின் பேச்சை பொருட்படுத்தவுமில்லை.. எனினும், இந்த முறை ராஜபாளையத்தில் ஸ்டாலினின் பிரச்சார பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.. அதாவது தனனுடைய 30 நிமிஷ பேச்சில் 10 நிமிஷம் ராஜேந்திர பாலாஜிக்காகவே ஒதுக்கினார்..

அமைச்சர்

அமைச்சர்

"ரவுடித்துறை அமைச்சர்.. பபூன் ரவுடி.. அவரை பார்த்தாலே பபூன் ஞாபகம் தான் வருது.. நான் எங்க போனாலும், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு கேப்பேன்.. ஆனால் முதன்முதலாக ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டுப்போடக் கூடாதுன்னு சொல்லி வாக்கு கேக்கறேன்.. ஜெயலலிதா இருந்திருந்தால் இவருக்கு அமைச்சர் பதவியை கொடுத்திருக்க மாட்டார்... அதிமுகவிலேயே இருந்திருக்க மாட்டார். ஆட்சிக்கு வந்ததும், அவர் மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை வேகப்படுத்தி, உண்மையை வெளிக் கொண்டுவந்து, அவரை ஜெயிலுக்கு அனுப்புவது தான் முதல் வேலை..! என்றார்.

 பேட்டி

பேட்டி

ஸ்டாலின் இப்படி பேசியதாலோ என்னவோ, அப்படியே யூ-டர்ன் போட்டு பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி.. முதல்வராக ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சொன்னதாவது:

 அருமை

அருமை

"இப்போது கொரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்... அவருடைய ஆரம்பமே அருமையாக இருக்கு" என்று பாராட்டி உள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டுகளில் திமுகவினரின் உழைப்பு, திட்டமிடல் அனைத்தும் முக்கியமானது... அதேபோல, தீவிர பிரசாரம், கடுமையான களப்பணியாற்றி இந்த வெற்றியை அவர்கள் பெற்றுள்ளனர்.. முக்கியமாக ஸ்டாலினின் உழைப்பை குறை சொல்ல முடியாது" என்று லிஸ்ட் போட்டு பாராட்டி உள்ளார் ராஜேந்திர பாலாஜி.

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

பதவியேற்றது முதல், எத்தனையோ அதிரடிகளை ஸ்டாலின் கையில் எடுத்து வருகிறார்.. அப்பழுக்கற்ற நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பு, இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி, போன்ற விஷயங்களில் மாற்றுக்கட்சிகளையும் திமுக தலைமை ஸ்கோர் செய்து வரும்நிலையில், "திமுக இனி கதம் கதம்.. இந்த தேர்தலோடு அவங்க வீட்டுக்கு போக வேண்டியதுதான்" என்று பேசிய ராஜேந்திர பாலாஜியே, இன்று மனம் திருந்தியும், மனம் திறந்தும் பாராட்டி உள்ளது அனைவரையும் உற்றுநோக்க வைத்து வருகிறது.

English summary
Ex Minister Rajendra balaji greets CM MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X