சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது கொஞ்சம் "தூக்கலா"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்!

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா தொலைபேசி உரையாடலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அதிமுக இருபெரும் தலைமையின் கீழ் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமிய நாட்டுப்புற கலைஞர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அம்மன், கருப்பசாமி வேடமிட்ட கலைஞர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவரது குடும்பத்தினர் நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

கூட்டுறவுத் துறை

கூட்டுறவுத் துறை


‌தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்து பேசுகையில்,
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி முழுமையாக இந்த துறையை அறிந்து கொள்ளவில்லை என்று தான் சொன்னேன். தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சர் பதவியேற்று ஒரு மாதம் தான் ஆகிறது. முதலில் அவர் துறையை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

சட்டசபை

சட்டசபை

கூட்டுறவுத் துறை புகார் குறித்து தற்போதைய அமைச்சர் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கலாம். எங்கள் மீது வழக்கு தொடுக்கலாம். கூட்டுறவுத் துறையில் மோசடி செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தான் என்ற ரீதியில் அதிமுக கட்சியையும் ஆட்சியையும் நடத்தினோம்.

நடவடிக்கை

நடவடிக்கை

கட்சியிலும் தவறு செய்தவர்கள் மீது இந்த அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எங்கள் ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத் துறை முறைகேடு குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளோம்.

காப்பீடு திட்டம்

காப்பீடு திட்டம்

மாவட்ட, மாநில கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் படுத்தப்பட்டுள்ளன. காப்பீடு திட்டம் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவு விவசாயிகளுக்கு கடன் பெற்றுக் கொடுத்தது எங்களுடைய ஆட்சிதான். திமுக ஆட்சியை குறை சொல்ல விரும்பவில்லை, அமைச்சர்கள் தெரிந்து கொண்டு பேசினால் போதும் என கூறுகிறோம்.

ஊரடங்கு நேரம்

ஊரடங்கு நேரம்

ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் திறக்ககூடாது என முதல்வரின் குடும்பமே தெருவில் போராட்டம் நடத்தினார்கள். தற்போது டாஸ்மாக் திறக்க முதல்வர் உத்தரவிட்டது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. கூட்டுறவுத் துறை புகார் குறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டலும் திமுகவினர் நடவடிக்கை எடுத்தால் வரவேற்கிறோம்.

இலக்கியம்

இலக்கியம்

தமிழ் கலாச்சாரத்தை இலக்கியத்தை இதுவரை எந்தப்பிரதமரும் பேசியதில்லை. தமிழை பற்றி, தமிழர்களை பற்றி பேசும் நல்ல பிரதமர் மோடி. பிரதமரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அதிகளவில் தடுப்பூசிகளை பெறுவார் என மக்களோடு சேர்ந்து நாங்களும் நம்புகிறோம். வணிக வரித்துறை அமைச்சர் மதுரையில் டிரான்ஸ்பார்மருக்கு மாலை போட்டு திறந்து வைத்திருப்பது சற்று தூக்கலாகவே தெரிகிறது.

வணிகவரித் துறை

வணிகவரித் துறை

மதுரையில் இரண்டு அமைச்சர்களில் வணிகவரித்துறை அமைச்சர் சிறப்பாக பணி செய்து செய்கிறார். எங்கள் ஆட்சி தற்போதும் தொடர்ந்திருந்தால் மதுரையை வேறு மாதிரி மாற்றியிருப்போம். சசிகலா தொலைபேசி உரையாடலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருபெரும் தலைமையில் கட்சி சென்று கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து எங்களுடைய பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுப்பார்கள். அதைப்பற்றி நான் கருத்து சொன்னால் சரியாக இருக்காது என பேசினார்.

English summary
Ex Minister Sellur Raju says that We dont care about Sasikala's Audio.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X