• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"கருணாநிதி" படத்திறப்பு.. புறக்கணித்த அதிமுக.. பதில் நாகரீகத்தை காட்ட தவறியதாக.. விமர்சனம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தது.. இது தற்போது விவாதமாக கிளம்பி உள்ளது.

  Stalin Emotional Speech on Karunanidhi portrait | 100 years of TN Assembly | OneIndia Tamil

  இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "சட்டப்பேரவை நூற்றாண்டு வரலாற்றை மாற்றுகிறது திமுக அரசு.

  தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

  சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் எப்படி வரமுடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

   ஜெயக்குமார் பேட்டி

  ஜெயக்குமார் பேட்டி

  ஜெயக்குமாரின் பேச்சு விவாத பொருளாக மாறியுள்ளது.. இந்த விழாவை அதிமுக புறக்கணித்திருக்க கூடாது என்றும் விவாதங்கள் கிளம்பி உள்ளன.. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

   புறக்கணிப்பு

  புறக்கணிப்பு

  அந்த படத்திறப்பு விழாவின்போது, ஜெயலலிதா ஏ1 குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்... எப்படி கலந்து கொள்ள முடியும்? பீச்சில் சமாதி திறந்ததற்கு டெல்லி பாஜகவில் இருந்து யாராவது வந்தாங்களா? வரவில்லை.. ஏனென்றால், ஊழல குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டவரின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டால், அது பேசுபொருளாக உருவெடுத்துவிடும், பாஜகவுக்கு கெட்ட பெயரை பெற்று தந்துவிடும்..

   பாஜக

  பாஜக

  பிறகு ஊழலுக்கு எதிராக எங்கேயும் ஓட்டுக் கேட்டு போக முடியாது.. அதனால்தான் கூட்டணியில் இருந்தாலும் விழாவை தவிர்த்தனர். பாஜக செய்ததைதானே திமுகவும் செய்தது? பாஜக மீது வராத கோபம் ஏன் திமுக மீது வந்தது? அந்த கேள்வியை இதுவரை பாஜக தலைமை மீது காட்டவில்லையே ஏன்? இப்போது திமுக மீது வெறுப்பை காட்டுவது சரியா?

   ஸ்டாலின்

  ஸ்டாலின்

  2016ம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்பு விழாவில், எங்கோ பின்சீட்டில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.. அப்படி இருந்தும், ஸ்டாலின் அந்த விழாவில் கலந்து கொண்டு, ஒதுக்கப்பட்டிருந்த தன்னுடைய இடத்தில் வந்து அமர்ந்தார்.. அதை பற்றி வெளியே எதுவும் சொல்லவில்லை.. அதிமுக குறித்து கருத்தும் தெரிவிக்கவில்லை.. ஆனால், அந்த போட்டோக்கள் அப்போது பேசுபொருளாக உருவெடுத்தன. இதுவா அரசியல் நாகரீகம் என்று பலர் வறுத்தெடுத்தனர்.

   அதிமுக

  அதிமுக

  எனினும் இதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல், அதிமுகவினரிடம் நட்பு பாராட்டி வருகிறார் ஸ்டாலின்.. அன்று ஸ்டாலின் பதவியேற்றபோது, முன்வரிசையில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி 2 பேரையும் உட்கார வைத்து தன்னுடைய நாகரீகத்தை வெளிப்படுத்தினார்... ஆட்சியில் 10 வருடங்கள் செய்த விமர்சனங்களை மனதில் வைத்து கொள்ளாமல், ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் அதிமுகவை கவுரவித்தது, பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடு.

   கருணாநிதி

  கருணாநிதி

  ஆனால், இன்று அதிமுக அப்படி ஒரு பதில் நாகரீகத்தை வெளிப்படுத்தவில்லை.. ஸ்டாலினுக்காக இல்லாவிட்டாலும், கருணாநிதிக்காவாவது இந்த விழாவில் அதிமுக பங்கேற்றிருக்க வேண்டும்.. கருணாநிதி இறந்தபோது, இதே அதிமுகவினர், இதே அவையில் புகழஞ்சலி செலுத்தியதன் அர்த்தம் உண்மைதானா? என்ற சந்தேகமும் வருகிறது.. ஓபிஎஸ், இபிஎஸ் வசித்து வரும் வீடுகளை அவரவர் இல்லங்களிலேயே தங்க சொன்ன பெருமிதத்துக்கு, நல்ல பதிலடி இது.. என்ன இருந்தாலும் ஸ்டாலின் குணம் யாருக்கும் வராது.. இப்படிப்பட்ட நன்றியுணர்ச்சியை பாஜகவும் தெரிந்து கொள்வது நலம்.. அந்த கட்சிக்கும் சேர்த்துதான் இது இழுக்கு" என்றனர்.

  English summary
  Why ADMK boycotted Kalaingar Karunanidhi photo opening ceremony
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X