சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவம், சட்டம் தவிர்த்து.. இனி அனைத்து பாடமும் ஒரே "போர்டு" கீழ் இயங்கும்.. புதிய கல்விக்கொள்கை!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியா முழுக்க மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்று புதிய கல்விக்கொள்கை அறிவித்துள்ளது.

நாடு முழுக்க பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தற்போது புதிய கல்விக்கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கல்வித்துறையில் நிறைய சீர்திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. முக்கியமாக உயர் கல்வி முறையில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அலையடிக்கும் புழல் ஏரி...சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லைஅலையடிக்கும் புழல் ஏரி...சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை

தாய் மொழி

தாய் மொழி

தற்போது கொண்டு வரப்பட்டு இருக்கும் புதிய கல்வி கொள்கையில் தாய் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைத்தது 5ம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின்புதான் ஆங்கிலத்திற்கு அனுமதி அளிக்கப்படும். 5ம் வகுப்பிற்கு பின் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு இந்த புதிய கல்விக்கொள்கையில் அனுமதி அளித்துள்ளது.

ஒரே அமைப்பு

ஒரே அமைப்பு

இதுமட்டுமின்றி, இன்னொரு பக்கம் மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்று புதிய கல்விக்கொள்கை அறிவித்துள்ளது. அதாவது கலை அறிவியல் படிப்புகளுக்கு ஒரு போர்ட் மற்றும் எஞ்சினியரிங் படிப்புகளுக்கு ஒரு போர்ட் இருந்தது என்பதை மாற்றிவிட்டு ஒரே போர்ட் கொண்டு வரப்படும் .

நடைமுறை எப்படி

நடைமுறை எப்படி

இவர்கள் அறிவிக்கும் நடைமுறை மூலமே இனி கல்லூரிகள் இயங்கும். ஆனால் மருத்துவம் , சட்ட படிப்புகளுக்கு தற்போது இருக்கும் இதே போர்ட் இருக்கும். இதற்காக மொத்தமாக புதிய குழு ஒன்று உருவாக்கப்படும். இந்த புதிய குழு அதிக கண்டிப்புடன் செயல்படும். இந்த அமைப்பு வெளிப்படையாக செயல்படும். கல்வி நிறுவனங்களில் சோதனை செய்யும் பணிகளையும், இந்த நிறுவனம் மேற்கொள்ளும்.

பாடத்தில் மேஜர்

பாடத்தில் மேஜர்

அதேபோல் மாணவர்கள் தங்கள் பாடத்தில் மேஜர் மற்றும் மைனர் என்று இரண்டு பிரிவுகளை படிப்பில் எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மேஜர் பாடத்தில் பாட்டனியும், மைனர் பாடத்தில் பேஷன் டிசைன் போன்ற படிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களின் திறமைகளை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு இந்த புதிய கல்விக்கொள்கையை அறிவித்துள்ளது.

English summary
Except for legal and medical colleges, All higher education institutions to be governed by one regulator says Nep.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X