சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: எம்பி, எம்எல்ஏ ஆகும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை.. காயத்ரி ரகுராம்

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலில் நான் ஒரு குழந்தை. எனக்கு எம்.பி, எம்எல்ஏ ஆகும் யோசனையெல்லாம் கிடையாது என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

நடிகை காயத்ரி ரகுராம் அரசியலுக்கு பிரேக் விட்டுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரிடம் ஒன்இந்தியா தமிழ் சார்பாக ஒரு குட்டி பேட்டி எடுத்தோம்.

exclusive interview of actress gayathri raguram

காயத்ரி ரகுராம் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

கேள்வி: அரசியலில் இருந்து மெதுவாக ஒதுங்குவது போல் தெரிகிறதே, என்ன காரணம்?

பதில்: அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுங்கவில்லை. எனக்கு சிறிய இடைவெளி தேவைப்படுவதால் எடுத்துக்கொள்கிறேன். வெறுமனே எதிர்கட்சிகள் மீது குற்றச்சாட்டை முன்வைப்பது மட்டும் அரசியல் இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அரசியலில் நான் குழந்தை, இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது.

கேள்வி: உங்களுடைய அடுத்தக்கட்ட செயல்பாடு என்னவாக இருக்கும்?

பதில்: நான் இன்றும் பாஜகவில் தான் இருக்கிறேன்.எனது ஆதரவும் பாஜகவுக்குத் தான், அதில் மாற்றமில்லை. இன்னும் கிரவுண்ட் வொர்க் செய்து அரசியலில் நல்லது செய்வேன்.


கேள்வி: எம்.பி., எம்.எல்.ஏ.ஆகும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

பதில்: நிச்சயம் அதுபோன்ற எண்ணம் எனக்கு இப்போது இல்லை.


கேள்வி: கட்சித் தலைமை வாய்ப்பு தந்தால்...

பதில்: ஒருவேளை எதிர்காலத்தில் கட்சி தலைமை எனக்கு வாய்ப்பு அளித்தால் அதை ஏற்று தேர்தலில் களம் காண்பேன்.

கேள்வி: காயத்ரிக்கும், தமிழிசைக்கும் என்ன பிரச்சனை? உங்களுக்குள் எப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டது?

பதில்: பிக்பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங் செல்வதற்கு முன் நான் மாநில தலைமையிடம் முறையாக தகவல் தெரிவித்துவிட்டு சென்றேன். ஆனால் தமிழிசையோ தன்னிச்சையாக நான் பாஜகவில் இல்லை என பேட்டி அளித்தார். அது ஏன் என தெரியவில்லை. அங்கிருந்துதான் கருத்துவேறுபாடு தொடங்கியது.

கேள்வி: நீங்கள் பாஜகவில் இருப்பதாக கூறுகிறீர்கள்.. உங்களை கட்சி நிகழ்ச்சிகளில் காணமுடிவதில்லையே, இவ்வளவு நாட்களாக ஆக்டிவ் அரசியலில் ஈடுபடாததற்கு காரணம்?

பதில்: கட்சிக்காக உழைக்க காத்திருந்தும், என்னை மாநில தலைமை பயன்படுத்திக்கொள்ளவில்லை. மற்றபடி பிரச்சாரத்திற்கு எல்லாம் கூட சென்றிருக்கிறேன். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டேன். குடும்ப திருமண நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாமல் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் அமெரிக்க சென்றுவிட்டேன். அதனால் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியவில்லை.

கேள்வி: தீவிர அரசியலில் காயத்ரியை எப்போது பார்க்கலாம்?

பதில்: அரசியலை எப்போது நான் முழுமையாக கற்றுக்கொள்கிறேனோ, அப்போது பார்க்கலாம்.

English summary
Actress and BJP functionary Gayathri Raguram has said that she is a baby in Politics and asserted that she will learn everything and come back soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X